search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேய்பிறை வளர்பிறை, நாட்கள், மாதங்களில் ருதுவானால் என்ன பலன்?
    X
    தேய்பிறை வளர்பிறை, நாட்கள், மாதங்களில் ருதுவானால் என்ன பலன்?

    தேய்பிறை வளர்பிறை, நாட்கள், மாதங்களில் ருதுவானால் என்ன பலன்?

    அடிப்படை பலன்கள் என்பது ருதுவாகும் நாட்கள், திதிகள், நட்சத்திரங்கள் இவற்றின் பலன்களை அறிந்து கொள்வது. முதலில் ஒரு பெண் எந்ததெந்த கிழமைகளில் பருவம் அடைந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
    நாம் இதற்கு முந்தைய பாகத்தில் ஒரு பெண் ருதுவாகக்கூடிய லக்கினங்களின் அவசியமும், கிரக அமைப்புகளின் அவசியத்தை விரிவாக பார்த்தோம். ருதுவாகும் ஜாதகத்தில் இந்தந்த கிரக அமைப்புகள் இப்படி இருந்தால் வாழ்வின் பலனை அறிந்துகொள்ளலாம். இருந்தாலும் அடிப்படை பலன்களை முதலில் பார்ப்போம். அடிப்படை பலன்கள் என்பது ருதுவாகும் நாட்கள், திதிகள், நட்சத்திரங்கள் இவற்றின் பலன்களை அறிந்து கொள்வது. முதலில் ஒரு பெண் எந்ததெந்த கிழமைகளில் பருவம் அடைந்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

    ஞாயிற்றுக்கிழமை ருதுவாகும் பெண்கள் அழகாக இருப்பார்கள். இரக்க மனம் கொண்டவர்கள். யார் மனமும் புண்படக்கூடாது என நினைப்பவர்கள். கணவன் இவர்கள் அன்புக்கு கட்டுப்படு வார்கள்! எல்லோரையும் எளிதில் நம்பி விடுவார்கள், ஏமாளித்தனமும் இருக்கும்.

    திங்கட்கிழமை ருதுவாகும் பெண்கள் பெரும்பாலும் குளிர்ந்த உடலை கொண்டவர்களாக இருப்பார்கள். கற்பனை சக்திகள் அதிகம். மாதம் ஒதுங் கும் போது அதிக வலி இருக்கும். இவர்களின் பேரழகும், கணவனின் ஏகப்பட்ட பிரியமும் ஒன்று சேர்வதால் இவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறக்கும்.

    செவ்வாய்க்கிழமை ருதுவாகும் பெணகள் தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக விளங்குவர்கள். இவர்களுக்கு முன் கோபம் அதிகம். இவர்கள் அவ்வளவு சுலபத்தில் யாரையும் நம்ப மாட்டார்கள். அதிகமான உஷ்ண உடம்பை கொண்டவர்கள். அதிக கோபம் கொண்டவர்களாக இருந் தாலும் அன்புள்ளம் கொண்டவர்கள். வீட்டில் மீனாட்சி ஆட்சிதான் நடக்கும்.

    புதன்கிழமையில் ருதுவாகும் பெண்கள் அறிவாளிகளாக திகழ்வார்கள் கலை, ஓவிய துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர் களாக இருப்பார்கள்! அழகான உடல்வாகு உடையவர்கள். கண்கள் கவர்ச்சியாக இருக்கும். இவர்களுக்கு வரும் கணவர் மனதுக்கு பிடித்தமானவராக இருப்பார். மகிழ்ச்சியான வாழ்கை நடத்துவர்.

    வியாழக்கிழமையில் ருதுவான பெண்கள் நற்குணம் கொண்டவர் களாக இருப்பர். அழுகும், தெய்வ பக்தியும் மிகுந்து இருக்கும். கணவர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டவராக இருப்பார்கள். தன்னுடைய கணவர் மனம் புண் படக்கூடாது என நினைப்பார்கள். இவர்கள் அதிக பிள்ளைகள் பெறுவார்கள்.

    வெள்ளிக்கிழமையில் ருதுவான பெண்கள் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பார்கள். கல்வி ஆர்வம் உடையவர்கள். தெய்வ பக்தி, உயர்ந்த சிந்தனை உடையவர்கள். தனித்துவமாக வாழக்கூடியவர்கள், செல்வமும் இருக்கும். சுத்தமான ஆடைகளை அணிவார்கள். தாய் வீட்டை விட, கணவர் வீட்டில் மன மகிழ்ச்சியுடன், செழிப்புடன் வாழ்வார்கள்.

    சனிக்கிழமையில் ருதுவான பெண்கள் முகக்களையுடன் இருப்பார்கள். இவர்கள் அதிக உடல் உழைப்பு இல்லாமல் எல்லாவற்றையும் சாதிக்க கூடியவர்கள்.பொறுமையும், சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். நேர்மையாக இருப்பார்கள். உண்மையும், சொன்ன சொல் மாறாதவர்கள். யாருக்காகவும், எதற்காகவும் நேர்மையை விட்டுக்கொடுக்காதவர்கள்.

    இதே போல் பனிரெண்டு தமிழ் மாதங்களில் பருவம் அடைவதற்கும் அந்தந்த மாதங்களுக்குரிய பலன்கள் இருக்கின்றன அதையும் பார்ப்போம்!

    சித்திரை மாதம்- ருதுவானால் உடம்பில் அதிக சூடு இருக்கும், தன்னம்பிக்கை அதிமாக இருக்கும். நல்ல கணவர் அமைவார்.

    வைகாசி மாதம் ருதுவானால் மகிழ்ச்சியும், சுகமும் கொண்ட பெண் ணாக இருப்பாள்! நல்ல புத்திர பாக் கியம் உண்டு.

    ஆனி மாதம் ருதுவானால் மனமும், உடம்பும் ஒருங்கிணைப்போடு இருக்கும். நல்ல புத்திர பாக்கியத்தோடு திகழ்வாள்.

    ஆடி மாதம்- ருதுவானால் அழகும், கவர்ச்சியும் இருக்கும். ஆடவர்கள் மனதை கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல சுகபோகம் உண்டு.

    ஆவணி மாதம் ருதுவானால் அழகான குழந்தைகளைப் பெற்று மகிழ்வாள்.தெய்வ பக்தி உள்ளத்தில் இருக்கும்.

    புரட்டாசி - மாதம் ருதுவானால் கர்ப்பபை பலம் கொண்டதாக இருக்கும். நல்ல புத்தியும், அறிவும் உடையவள்.

    ஐப்பசி மாதம் ருதுவானால் குளிர்ந்த உடலை கொண்டவள். கணவர் மீது அன்பும், அனுசரனையும் கொண்ட பெண். சாதூர்யமானவராக இருப்பார்.

    கார்த்திகை மாதம்- ருதுவானால் முன் கோபம் இருந்தாலும் நல்ல மனம் உண்டு! முருகனின் அருள் பெற்றவராக இருப்பாள்.

    மார்கழி மாதம் ருதுவானால் கண வன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் கிடைக்கும். நல்ல குழந்தைகளைப் பெறுவாள்.

    தை மாதம் ருதுவானால்- எப்போதும் தன்னம்பிக்கை கொண்டவராக இருப்பாள். பெற்றோர்கள் மீது பாசம், அன்பு கொண்டவள். புண்ணியம் செய்தவள் ஆவாள்.

    மாசி மாதம் ருதுவானால் சுக போகத்துடன் வாழக்கூடியவள். நல்ல கணவன், குழந்தைகள் உண்டு! செல்வ வளம் பெற்று வாழ்வாள்.

    பங்குனி மாதம் ருதுவானால் -கண்ணியமும், தெய்வ பக்தியும் கொண்டவள்! மற்றவர்களை மதிக்க கூடியவள். நல்ல புத்திர பாக்கியம் உண்டு!

    திதியை வைத்து பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம். பொதுவாக தேய்பிறை, வளர்பிறை திதிகளுக்கு ருதுவாகும் பலன் பொதுவாகத்தான் அமையும்.

    பிரதமை: - நல்ல குணம், சிறந்த புத்தி மானாக இருப்பாள்!

    துவிதியை-: நல்ல அழகுடையவளாக, கவர்ச்சியுடைவளாக இருப்பாள்.

    திருதியை:- சுக போகங்களில் நாட்டம் செல்லும், சுக வாழ்வு உண்டு.

    சதுர்த்தி: - எதையும் எதிர்த்து சமாளிக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

    பஞ்சமி: நல்ல குழந்தை செல்வங்கள், நல்ல வாழ்வு அமையும்.

    சஷ்டி:- தர்மமும், தெய்வ பக்தியும் உடையவள்.

    சப்தமி:- கணவனின் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்பவள். அஷ்டமி: -கணவரின் அன்பையும், பாசத்தையும் சம்பாதிப்பாள்.

    நவமி: எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை தகர்த்து வாழ்வில் வெற்றி பெறுவாள்.

    தசமி:- தான, தர்மங்கள் செய்வாள்.

    ஏகாதசி:- கடவுள் நம்பிக்கையுடன் இருப்பாள்! எதையும் ஆராய்ந்து செய்படக்கூடிவள்.

    துவாதசி:- நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழ்வாள்.

    திரயோதசி:- முன் கோபம் வரும் ஆனால் நல்ல குணம் உண்டு!

    சதுர்த்தசி-:கணவர் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டவள்.

    நாம் பதினான்கு திதிகளுக்கு சுருக்கமாக பலன்களை பார்த்தோம். இனி பதினைந்தாவது திதியாக தேய்பிறையில் அமாவாசையும், வளர்பிறையில் பவுர்ணமியும் வரும்.

    ஒருவர் அமாவாசை அல்லது பவுர்ணமி திதியில் பிறந்தாலோ, பெரிய பெண் ஆனாளோ அவர்களுக்கு திதி சவுமிய தோசம் கிடையாது என்கிறது சாஸ்திரம். அதாவது இந்த திதிகளில் ருதுவாகும் பெண்கள் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அதை தகர்த்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள். ஒரு விசயத்தை முழுமையாக அறியாதவர்கள் அமாவாசையில் பிறந்தாலோ, ருதுவானாலோ திருடர் என்பார்கள்! அது அப்படி அல்ல.

    இந்த திதியில் ருதுவானால், பிறந்தால் மற்றவர்கள் மனதை அன்பால் திருடி விடுவார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தம். அமாவாசையில் ருது வானால் நல்ல அன்பு உள் ளம் கொண்டவராகவும், எல்லோரையும் எளிதில் கவரக் கூடியவராகவும் இருப்பார். பவுர்ணமியில் ருதுவாகும் பெண் அழகுணர்ச்சியும், கற்பனை திறனும் கொண்டவராக இருப்பார்.

    கம்பீரமும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருப்பார். இப்படி ஒரு பெண் ருதுவாகும் போது நாள், திதி, மாதம் என ஒவ்வொன்றுக்கும் தனி தனி பலன்கள் உள்ளது. ஒரு ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்லும் போது இதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும்.

    ஜாதகத்திற்கு ஒருபலன் சொல்கிறீர்கள், மாதம், நாள், திதி, நட்சத்திரம் என ஒவ்வொன்றும் ஒரு பலன் சொல்கிறீர்கள், நாங்கள் என்ன பலன்களை பின்பற்றுவது என நீங்கள் நினைப்பது புரிகிறது! எல்லாம் சேர்ந்ததுதான் முழுமையான பலனை கொடுக்கும்.

    ஒருவர் பலனை பார்க்கும் போது நாம் நாள், திதி என அனைத்து விதமான பலன்களை ஒருங்கிணைத்துதான் பலன் சொல்ல வேண்டும். எல்லாம் சேர்ந்தால்தான் நல்ல சமையல் ருசிக்கும். அதுபோல் ஒரு பலனை நாம் எல்லாம் பார்த்து கணித்து சொன்னால் தான் சொல்லும் பலன் முழுமையடையும்.
    Next Story
    ×