search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுசீந்திரம் கோவில் தேரோட்ட தத்துவம்
    X
    சுசீந்திரம் கோவில் தேரோட்ட தத்துவம்

    சுசீந்திரம் கோவில் தேரோட்ட தத்துவம்

    பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும் என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.
    புதுமணத் தம்பதிகள் சுசீந்திரம் கோவில் சென்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். ஆம்! பெண்ணாசையால் சாபம் அடைந்து விமோசனம் பெற்ற இந்திரனும், கணவனை கண்கண்ட தெய்வமாக போற்றி வாழ்ந்த கற்பரசி அனுசூயாவும், பித்தனை நினைத்து மனம் பித்தாகி முடிவில் பிறை சூடிய பெருமானோடு சேர்ந்து அறம் வளர்த்த நாயகி போன்ற பெண்மணிகளின் தெய்வீக திருப்பாதங்கள் பட்ட இந்த திருத்தலத்தில் பெண்ணின் பெருமை நிலைத்து நிற்பது போன்று பெண்கள் விளங்க வேண்டும் என்பதின் அடையாளமாக மார்கழி திருவிழா தேரோட்டத்தை புதுமணத் தம்பதியினர் கண்டிப்பாக காண வேண்டும் என்பது முன்னோர் வாக்கு.

    அதிலும் பன்னிரண்டு படாகையை புதுமணத் தம்பதிகள் கண்டிப்பாக காண வேண்டும். சுசீந்திரம் தேர் திருவிழாவுக்கு புத்தாடை உடுத்தி புது மணத்தம்பதிகள் வருவது நமது மனதை விட்டு அகலாத காட்சியாகும்.

    இந்த அரிய காட்சி மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நடந்தது. எனவே தான் புதுமண தம்பதிகள் காலமெல்லாம் ஒற்றுமையாய் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ இந்த நிகழ்ச்சியை காண வருகிறார்கள். இதனால் தங்கள் தாலி பாக்கியம் நீண்ட நாள் நிலைக்கும் என்றும் பெண்கள் நம்புகிறார்கள்.
    Next Story
    ×