search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா?
    X
    தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா?

    தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா?

    கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள். உண்மையிலேயே அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது குறித்து பார்க்கலாம்.
    வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு இருக்கும். சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைப்போம். இப்படி வீட்டில் அல்லது கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள். உண்மையிலேயே அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா?

    தேங்காய் உடைக்கும்  போது அது அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு அது ஏமாற்றத்தை, கலக்கத்தை ஒரு மன குழப்பத்தை அளிக்கும். இதை ஒரு அபசகுனமாக பார்பார்கள். ஆனால், உடைக்கும் போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி என்றும். உங்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்பதன் நல்ல அறிகுறி தான் இது என கூறப்படுகிறது. கோவிலில் சாமிக்கு படைக்கும் தேங்காய் மட்டும் அழுகக்கூடாது. காரணம் அழுகிய தேங்காயை சாமிக்கு படைக்க கூடாது என்பது மட்டுமே பொருள். மற்றபடி அது அபசகுணம் அல்ல. 
    Next Story
    ×