
குழந்தைகளை குரங்கே, சனியனே என்றெல்லாம் திட்டக் கூடாது. உப்பைத் தரையில் சிந்தக்கூடாது. துணி மணிகளை உடலில் அணிந்த படியே தைக்கக்கூடாது என்பார்கள். சரி வாசல் படியில் ஏன் உட்காரக் கூடாது என்கிறார்கள் தெரியுமா?
வாசல் படியில் வைத்துதான், இரண்யகசிபுவை நரசிம்ம பெருமாள் வதம் செய்தார். அதனால் அப்படிச் சொல்கிறார்கள். வாசல்படியில் வைத்து பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. அங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கவும் கூடாது.