search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    மார்கழி மாதம் முழுவதும் பழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

    மார்கழி மாதம் முழுவதும் பழனி முருகன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு நடைபெற்று விஸ்வரூப தரிசனம் முடிந்தபின் 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறும்.
    பழனி முருகன் கோவிலில் வழக்கமாக காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அதைத்தொடர்ந்து விளாபூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கும்.

    மாதாந்திர கார்த்திகை மற்றும் திருவிழா நாட்கள் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் மார்கழி மாதம் முழுவதும் பழனி முருகன் கோவில், திருஆவினன்குடி கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு நடைபெற்று விஸ்வரூப தரிசனம் முடிந்தபின் 4.30 மணிக்கு விளாபூஜை நடைபெறும்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மார்கழி மாதம் பிறக்கிறது. இதையடுத்து இன்று முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி வரை மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது.
    Next Story
    ×