search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்கழி மாதம்"

    • ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே இது மார்கழி மாதம்.
    • ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி

    பாடல்

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

    நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

    ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம்

    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்போல் முகத்தான்

    நாராயணனே நமக்கே பறை தருவான்

    பாரோர் புகழ்ப் படிந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களே! ஆயர்பாடியில் பிறந்த செல்வச் சிறப்புமிக்க சிறு பெண்களே ! இது மார்கழி மாதம். முழு நிலவு ஒளி வீசும் நாள். இந்த நாளில் நீராடச்செல்வோம். கூர்மையான வேல் உள்ளவனும், பகைவர்களுக்கு கொடுமை செய்பவனும் ஆன நந்தகோபனின் குமாரன், அழகு நிறைந்த கண்களைக் கொண்ட யசோதை பிராட்டிக்கு இளம் சிங்கம் போன்றவன், கார்மேகம் போன்ற உடல் அமைந்தவன், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று பிரகாசிக்கும் முகத்தையும் கொண்ட ஸ்ரீமன் நாராயணன், நாம் விரும்பிய வரத்தைத் தருவான். அதனால் உலகத்தார் அனைவரும் புகழும் வண்ணம் நீராடி மகிழ்வோம்; வாருங்கள்!

    திருவெம்பாவை

    பாடல்

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

    சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்

    கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து

    போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

    ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

    ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    ஒளிபொருந்திய அகண்ட கண்களுடைய தோழி! தொடக்கமும் முடிவும் இல்லாதவன் சிவபெருமான். ஒளிவடிவான அவனைப்பாடினோம். அந்த பாடலைக் கேட்ட பின்பும் நீ உறங்குகின்றாயே. உன்னுடைய காதுகள் உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? சிலம்பணிந்த இறைவனின் திருப்பாதங்களை நாங்கள் புகழ்ந்து பாடுவதைக் கேட்ட ஒருத்தி, அவன் நினைவில் விம்மி விம்மி அழுது தன்னை மறந்தாள். பின்னர் மலர் படுக்கையில் இருந்து புரண்டு எழுந்து, எதுவும் செய்யமுடியாமல் விழுந்து விட்டாள். இறைவனிடம் அவள் கொண்ட பக்தி நிலை அப்படியானது. ஆனால் எங்கள் தோழியாகிய நீயோ இன்னும் உறங்கிக்கொண்டிருக்கிறாய். இனியாவது எழுந்து வந்து இறைவனைப் பாடுவாய்.

    • மார்கழி மாதம் `தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
    • தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக இருக்கிறது.

    மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். மார்கழி மாதம் `தனுர் மாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார். சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை.

    மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான், வேறெந்த நிகழ்வுகளையும் நடத்தாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன்படியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

    மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பதும் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்தக் காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

    மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

    மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.

    மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது.

    திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான். இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது. அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணுசகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிப்பது இறைவனின் அருளைத் தரும்.

    • நயினாரகரத்தில் மார்கழி பஜனை சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
    • பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகில் உள்ள நயினாரகரத்தில் மார்கழி பஜனை நடைபெற்று வருகிறது. சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் பஜனை அதிகாலை 5 மணிக்கே கன்னி விநாயகர் கோவிலில் ஆரம்பித்து சேனை விநாயகர் கோவில் தெரு, பாக்கிய விநாயகர் கோவில் தெரு, குலசேகரநாதர் மற்றும் வெங்கடாஜலபதி கோவில் தெரு வழியாக கருப்பா நதிக்கரையில் வீற்றிருக்கும் குலசேகர அம்மன் கோவில் வரை சென்று, சேனை விநாயகர் கோவில் வந்து முடிவடைகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களிலும் பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மார்கழி பஜனையை திராவிட சுப்பு மற்றும் கோமதி ராமன் வழி நடத்துகின்றனர்.

    • மார்கழியில் அதிகாலை நேரத்தில் வரும் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது உடல் நலம் மேம்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    • கிராமங்களில் பஜனை பாடல்கள் மற்றும் இசைச்கருவிகள் இசைப்பதற்காக வரும் சிறுவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல் வழங்குவார்கள்.

    சென்னை:

    மார்கழி மாதம் என்பது இறைவன் விழித்தெழும் சமயத்தில் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்ய தயாராகும் காலமாகும்.

    அந்த சமயத்தில் இறைவனை நாம் புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனமகிழ்ந்து நமது பிரச்சினைகள், நோய்களை நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதீகம்.

    மார்கழியில் அதிகாலை நேரத்தில் வரும் குளிர்ந்த காற்றை சுவாசிக்கும்போது உடல் நலம் மேம்படும் என்பது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தான் மார்கழி மாதம் அதிகாலை நேரத்தில் பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் கோவில் மாட வீதிகளை வலம் வருவார்கள்.

    இந்த பண்பாட்டு மரபு தமிழ்நாடு முழுவதும் காலம், காலமாக நடத்தப்பட்டு வருகிறது. மார்கழி குளிரையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் நீராடி திருநீறு பூசி நடுங்கிக்கொண்டே பஜனை பாடல்களை பாடிக் கொண்டே செல்வார்கள்.

    கிராமங்களில் பஜனை பாடல்கள் மற்றும் இசைச்கருவிகள் இசைப்பதற்காக வரும் சிறுவர்களுக்கு சுண்டல், சர்க்கரை பொங்கல் வழங்குவார்கள். எனவே மார்கழி மாதம் பஜனை பாடல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள்.

    மார்கழி 30 நாட்களும் ஆற்றில் நீராடி இறைவனை வழிபட வேண்டும் என்ப தற்காகவே ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் திருப்பாவை பாடினார். அதுபோல சிவபெருமானை பாடுவதற்காக மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடினார். இந்த பாடல்களை பிரதிபலிக்கும் வகையில் மயிலாப்பூரில் மார்கழி முதல் நாளான இன்று அதிகாலை குளிரை பொருட்படுத்தாது குழந்தைகள் ஆண்டாள், நாரதர் மற்றும் பல்வேறு வேடம் அணிந்து ரத வீதிகளில் இசை வாத்தியங்களுடன் திருப்பாவை- திருவெம்பாவை பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதை யொட்டி இன்று அதிகாலையிலேயே கபாலீஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி, கொரட்டூர், பாடி சிவன் கோவில், நங்கநல்லூர் மேற்குமாம்பலம் உள்பட தமிழகம் முழுவதும் பஜனை பாடல்கள் எதிரொலித்தது.

    இந்த மாதம் முழுவதும் பெரியோர் முதல் சிறியோர் வரை பங்கேற்கும் பஜனை உலா நடைபெறும்.

    ×