search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்

    இந்த ஆண்டு மிக, மிக சிறப்பான தீப திருநாள்

    இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10-ந்தேதி செவ்வாய்கிழமை வருகிறது. எனவே அன்று தீப வடிவில் அண்ணாமலையாரை வழிபடுவது மிக, மிக புண்ணியம் தருவதாக கருதப்படுகிறது.
    சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமையாக இருக்கும். ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை. இதனால் தான் அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணம் என்றால் சிவப்பு என்று பொருள். இந்த கோவில் அக்னி கோவில். அக்னி கோவிலுக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. அக்னிக்குரிய காரகன் அங்காரகன். ஆகவே திருவண்ணாமலை கோவிலில் சிவபெருமானுக்கு செவ்வாய்க்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கும்.
     
    செவ்வாய்க்கிழமை அன்று அண்ணாமலையாரை வழிபடுவோர் பிறவி பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 10-ந்தேதி செவ்வாய்கிழமை வருகிறது. எனவே அன்று தீப வடிவில் அண்ணாமலையாரை வழிபடுவது மிக, மிக புண்ணியம் தருவதாக கருதப்படுகிறது. ஆகையால் இந்த ஆண்டு கார்த்திகை தீப தரிசனம் சிறப்பானதாகும்.
     
    Next Story
    ×