
சாதாரணமாக கிரிவலம் என்பது எப்போது வேண்டுமனாலும் செல்லலாம். இதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் முன்பிருந்து பக்தர்கள் கிரிவலம் தொடங்குவர். முதலில் இந்திர லிங்கத்தை வணங்கி படிப் படிப்படியாக அனைத்து லிங்கங்களையும் வணங்கியபின்பு இறுதியாக ஈசான்ய லிங்கத்தை தரிசனம் செய்வர். அதன்பின் ராஜகோபுரம் முன்வந்து கிரிவலத்தை முடிக்க வேண்டும்.
ஆனால் குபேரர் கிரிவலம் என்பது குபேர லிங்கத்தில் ஆரம்பித்து குபேர லிங்கத்திலேயே முடிப்பது சிறப்புக்குரியதாகும். அதன்படி நேற்று குபேரர் கிரிவலம் என்பதால் கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கம் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை குபேர லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
சாமியை தரிசனம் செய்த பின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.