search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நிறைபுத்தரிசி பூஜை
    X
    நிறைபுத்தரிசி பூஜை

    பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெரும்பாலான பூஜைகள் கேரள வழக்கப்படி நடைபெறும். அதில் ஒரு பூஜை தான் நிறைபுத்தரிசி பூஜை.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பெரும்பாலான பூஜைகள் கேரள வழக்கப்படி நடைபெறும். அதில் ஒரு பூஜை தான் நிறைபுத்தரிசி பூஜை. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என 2 சாகுபடிகள் நடைபெறும். இந்த சாகுபடி சமயத்தில் அறுவடையாகும் நெற்கதிர்களை அம்மன் கால்பாதத்தில் வைத்து வழிபடுவதே நிறைபுத்தரிசி பூஜை.

    ஆடி மாதம் ஒரு முறையும், தை மாதத்தில் மற்றொரு முறையில் இந்த நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். நெல்மணிக்கட்டுகளை அறுவடை செய்து கன்னியாகுமரி வடக்கு தெருவில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வருவார்கள். பின்னர் அங்கிருந்து கோவில் மேல்சாந்தி, நெல் மணிக்கட்டுகளை தலையில் சுமந்து மேளதாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வருவார். கோவிலில் அம்மன் கால் பாதத்தில் நெல்மணிக்கட்டுகள் படைக்கப்பட்டு பூஜை நடைபெறும். பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இந்த நெற்கதிர்களை வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் கட்டினால் அந்த ஆண்டு முழுவதும் வியாபாரம் வளரும், செல்வம் கொழிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த நெல்மணிகளை வயலில் விதைத்தால் நெல்சாகுபடி அமோகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நெற்கதிர்களை வாங்க பக்தர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்.
    Next Story
    ×