search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ருட்டியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பண்ருட்டியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    பண்ருட்டி முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பண்ருட்டி போலீஸ் குடியிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 9-ந்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சுமி ஹோமம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜையும், நேற்று முன்தினம் 2-ம் கால யாக சாலை பூஜை, கோ பூஜை, 3-ம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று 4-ம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது.

    பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று காலை 10.30 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொ டர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி சண்முகம், காடாம்புலியூர் மலர்விழி, புதுப்பேடடை ரேவதி, வியாபாரிகள் சங்க பிரமுகர் சண்முகம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர். 
    Next Story
    ×