search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீ காகபுஜந்தர்
    X
    ஸ்ரீ காகபுஜந்தர்

    காஞ்சியில் ஸ்ரீ காகபுஜந்தர்

    சிவனின் ஆசி பெற்ற தேவர்கள் செய்த தவத்தினால் சிவன் அகமகிழ்ந்து ஜோதியம்பாக்கத்தில் எழுந்தருளி காகபுஜந்தராக காட்சியளித்தார்.
    முன்னொரு காலத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், 11 கிரகங்களும், 27 யோகங்களும் சிவன் தலைமையில் கயிலாயம் நோக்கி புறப்பட்டன. மரணமில்லா பெருவாழ்வைப் பெறவும் உலகங்களை ஆளும் பேராண்மை பெறவும், சிவனின் அருளாட்சியில் திளைக்கவும், கயிலாயம் நோக்கிச் சென்றன. இவ்வகையான திறன்கள் அமையப்பெற வேண்டி சிவனை இறைஞ்சி வரங்கள் கேட்டன.

    அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்த சிவபெருமான் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற சில ஆணைகளை இட்டார். அவரது உரையில் புனிதத்தலங்களில் மேன்மைபெற்ற, முக்தி அளிக்க வல்ல காஞ்சிக்கு செல்லும்படி கூறினார். காஞ்சியில் காலடி பட்டாலே சர்வசித்திகளும் கிடைக்கப்பெறும். அத்தகு மேன்மை வாய்ந்த காஞ்சியில் தவம் புரிந்தால் கிடைத்ததற்கரிய வரங்களைப் பெறலாம் என்று கூறினார்.

    காஞ்சியின் தெற்கு எல்லையில் உள்ள ஜோதிவனம் அடைந்து, புனித செய்யாற்றின் வடக்குப்பகுதியில் தவம் புரிந்தால், எல்லா வகை சித்திகளைப் பெறலாம் என்றும் கூறினார். அவரது ஆணைப்படி ஜோதிவனம் (சோத்தியம்பாக்கம்) அடைந்து தவம் புரிந்தனர். சிவனின் ஆசி பெற்ற தேவர்கள் செய்த தவத்தினால் சிவன் அகமகிழ்ந்து ஜோதியம்பாக்கத்தில் எழுந்தருளி காகபுஜந்தராக காட்சியளித்தார். காகபுஜந்தரின் விஸ்வரூப காட்சி அவரது துணைவியான பகுளாதேவி வலதுபுறமும் தேவர்களும் முனிவரும் புடைசூழ காட்சி அளித்தது அருட்பெரும் நிகழ்வு ஆகும். இப்புனிதக் கோவில் காஞ்சிக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம்-வந்தவாசி வழியில் மங்கல் கூட்டுரோடு - மங்கல் ஜங்ஷன் ரோடு சந்திப்பில் புதுப்பாளையம் செல்லும் உட்பகுதியில் அமைந்துள்ளது.
    Next Story
    ×