search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷ்ணு
    X
    விஷ்ணு

    காக்கும் கடவுள் விஷ்ணு

    மும்மூர்த்திகளில் ஒருவராகவும், காக்கும் கடவுளாகவும் வழிபடப்படுபவர் விஷ்ணு பகவான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதால் ‘திருமால்’ என்று வணங்கப்படுகிறார்.
    மும்மூர்த்திகளில் ஒருவராகவும், காக்கும் கடவுளாகவும் வழிபடப்படுபவர் விஷ்ணு பகவான். இவர் தனது மனைவி லட்சுமியுடன் வைகுண்டத்தில் வசிக்கிறார். இவர் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் நாகத்தின் மீது துயில் கொண்டபடி இருக்கிறார்.

    இந்த உலகத்திற்கு தீய சக்திகளால் ஆபத்து ஏற்படும் போதெல்லாம் இவர், பூமியில் பிறப்பெடுப்பதாக புராணங்களும், இதிகாசங்களும் எடுத்துரைக்கின்றன. அதன்படி அவர் எடுத்த அவதாரங்கள் ‘தசாவதாரம்’ என்று போற்றப்படுகிறது. அவற்றில் நரசிம்மர், ராமன், கிருஷ்ணன் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவரது வாகனமாக கருட பகவான் இருக்கிறார்.

    இவர் அகிலத்தைக் காப்பாற்றவும், அசுரர்களை அழிக்கவும் சுதர்சன சக்கரத்தை பயன்படுத்துகிறார். திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பதால் ‘திருமால்’ என்றும், ‘நாராயணன்’ உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் விஷ்ணு வணங்கப்படுகிறார்.
    Next Story
    ×