
இதனால் ஊர்மிளா அயோத்தியிலேயே தங்கினாள். தன்னுடைய கணவனைப் பிரிந்து தான் எப்படி இருக்கிறோம் என்று அவர் மனக்கவலையில் இருந்தார். அப்போது ராமனுக்கு காவலாக இருந்த லட்சுமணன், தனக்கு தூக்கம் என்பதே இருக்கக்கூடாது என்பதற்காக, நித்ரா தேவியிடம் தன்னுடைய தூக்கத்தையும் சேர்த்து தன் மனைவி ஊர்மிளாவிடம் கொடுத்துவிடும்படி கூறினார்.
அதன்படி நித்ராதேவி, ஊர்மிளாவை தழுவிக் கொண்டாள். அதன் காரணமாக, துயரத்தில் தவித்து வந்த ஊர்மிளா, ராமனும், லட்சுமணனும் வனவாசம் முடிந்து வரும் வரை நித்திரையிலேயே காலத்தைக் கழித்தாள்.