search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
    X

    திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது

    வில்லியனூரில் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வில்லியனூரில் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை தொடங்கி, 17-ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நாளை இரவு 7 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 8-ந் தேதி பரிவேட்டை, 12-ந் தேதி மாலை 6.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், 13-ந் தேதி காலை 8.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தை புதுவை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைக்கிறார். விழாவில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்கின்றனர்.

    14-ந் தேதி இரவு தெப்ப உற்சவம், 15-ந் தேதி இரவு 7 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்தில் முத்துப்பல்லக்கு வீதிஉலா, 16-ந் தேதி விடையாற்றி உற்சவம், 17-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அலுவலர் திருவரசன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×