search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆடி மாதத்தினை சிறப்பிக்கும் பழமொழிகள்
    X

    ஆடி மாதத்தினை சிறப்பிக்கும் பழமொழிகள்

    தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு தான் அதிக பழமொழிகள் கூறப்படுகிறது. ஆடி மாதத்துடன் இணைந்து கூறப்படும் இப்பழமொழிகள் அம்மாதத்தின் சிறப்பையும் பெருமையையும் போற்றும் விதமாக உள்ளது.
    ஆடி மாதத்திற்கு பல சிறப்புகள் உள்ளன. அதுபோல் தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு தான் அதிக பழமொழிகள் கூறப்படுகிறது. ஆடி மாதத்துடன் இணைந்து கூறப்படும் இப்பழமொழிகள் அம்மாதத்தின் சிறப்பையும் பெருமையையும் போற்றும் விதமாக உள்ளது. பழமொழிகள் என்பது காலம் காலமாய் நம் முன்னோர்கள் மூலம் கூறப்பட்டு வந்த சுருக்கமான வரிகள் கொண்ட பொருள் பொதிந்த வரிகள். பழமொழிகள் ஒவ்வொன்றும் சமுதாய நலனை கருத்தில் கொண்டு அறிவு கூர்மையுடன் கூறப்படுபவை.

    பழமொழிகள் என்பதில் ஆடி மாதத்தின் பெருமை மற்றும் அம்மாத நிகழ்வுகளை கூறும் பழமொழிகள் உலக புகழ் பெற்றவை. வருடா வருடம் ஆடி மாதம் பிறக்கும் போது அப்பழமொழிகள் ஒவ்வொருவர் நினைவிலும் நிற்கும். முந்தைய நாளில் வீட்டில் உள்ள முதியவர்கள் அடுத்த தலைமுறைக்கு இப்பழமொழிகளை எடுத்துக் கூறி உணரச் செய்வர்.

    ஆடி மாதத்திற்குரிய பழமொழிகள்

    ‘ஆடி பட்டம் தேடி விதை’, ‘ஆடி காற்றில் அம்மையே பறக்கும்’, ‘ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்’, ‘ஆடி செவ்வாய் தேடி குளி அரைச்சமஞ்சள் பூசிக்குளி’, ‘ஆடிக்கூழ் அமிர்தமாகும்’, ‘ஆடிப்பால் குடிக்காத மாப்பிள்ளையை தேடிபிடி’, ‘ஆடித்தேரை தேடி தரிசி’, ‘ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடி’, ‘ஆடி வரிசை தேடி வரும்’, என பலவிதமான ஆடி மாதத்து பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன. இவையனைத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் உள்ளன.

    ‘ஆடிப்பட்டம் தேடி விதை’

    ஆடி மாதத்தில் தான் அனைத்து விவசாயப் பணிகளும் தொடங்கும். ஆடியில் விதைத்தால்தான் பின் மழை பொழிந்து பயிர் நன்றாக செழித்து வளரும். அத்துடன் பிராணவாயும், ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் உள்ள ஆடி மாதத்தில் விதையை விதைப்பார்கள். அதன் தொடர்ச்சி நீலும் விதமாக வருங்கால சந்ததியினர் அறியும் நோக்கில் ‘ஆடி பட்டம் தேடி விதை’ என்ற பழமொழியை கூறியுள்ளனர். இன்று விவசாய பணிகள் மட்டுமல்ல வீட்டு தோட்டங்களில் விதைப்பவர்கள்கூட ஆடி மாதத்தில் அவரை விதை, கத்திரி விதை, விதைத்து செடிகளை வளர்ப்பர். தட்சணாயின காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அதிக சக்தியுடன் வெளிப்படுவதால் விவசாய செழிப்புக்கு உதவும் என்பதும் ஓர் காரணம்.

    ஆடி மாதத்தில் அம்மையும் பறக்கும்’

    அம்மை நோய்கள் அதிக வெப்பத்தின் காரணமாய் ஏற்படுகின்றன. ஆடி மாதத்தில் அதிகபடியான குளிர்காற்று வீசுவதால் அம்மை நோய் பறந்து விடும் என்பது உண்மை. இதனையே ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் எனக்கூறினர். இப் பழமொழி நாளடைவில் மருவி ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என திரித்து கூறப்படுகிறது. ஏனென்றால் அவ்வளவு வேகமாய் காற்றடிக்கும்.

    அதுபோல் ‘ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்’. அதாவது ஆடி மாதத்திலேயே பருவக்காற்று அதிகபடியாக வீசும்போது ஐப்பசி மாதம் நல்ல மழை பெய்யும் என்பது. இது பெரும்பாலும் உண்மையாக நிகழ்ந்துள்ளது.

    ஆடிக்கூழ் அமிர்தமாகும்

    ஆடி மாதத்தில் வார்க்கப்படும் கூழ் என்பது உடலுக்கு குளிர்ச்சியும், ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகவும் உள்ளதால் தேவலோக அமிர்தத்திற்கு ஒப்பாக கூறப்படுகிறது. ஆடி மாதத்தில் நோய்கள் ஏதும் தாக்காமல் பாதுகாக்கும் ஆடிக்கூழ் எனும் மருந்து கஞ்சி, கேழ்வரகு கூழ் போன்ற அனைத்தும் அமிர்தத்தின் சுவை மட்டுமல்ல, அமிர்தத்திற்கு ஒப்பாய் நமது உடல் நலன் பேணும் அற்புத உணவு ஆகும். அதனாலேயே ‘ஆடிக்கூழ் அமிர்தமாகும்’ என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×