என் மலர்

  ஆன்மிகம்

  செல்லாண்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.
  X
  செல்லாண்டி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

  செல்லாண்டி அம்மன் கோவிலில் தேரோட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புஞ்சை சங்கேந்தி கிராமத்தில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
  திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் புஞ்சை சங்கேந்தியில் செல்லாண்டி அம்மன் பிடாரிவாசல்,சப்பாணி கருப்பு கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பெருவிழா தொடங்கி வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் மே மாதம் 9 -ந் தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  மே 16-ந்தேதி மறுகாப்பு கட்டும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து தினந்தோறும் கோவில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

  தொடர்ந்து 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை சாமி அன்ன வாகனம், சிம்ம வாகனம், மயில் வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், பூத வாகனம், குதிரை வாகனத்திலும் திருவீதியுலா நடைபெற்றது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தில் புள்ளம்பாடி, வந்தலை கூடலூர்,இ.வெள்ளனூர், குமுளூர், கண்ணாக்குடி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டிசிறப்பு நாதஸ்வரம் மற்றும் வாணவேடிக்கைகள், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆங்காங்கு பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், திருப்பணி குழுவினர் இளைஞர்கள் செய்திருந்தனர்.

  விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள பட்டது.

  தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) பகல் 12மணியளவில் மஞ்சள்நீராட்டுடன் சாமி திருவீதியுலாவும் நாளை இரவு 7மணியளவில் சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
  Next Story
  ×