search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேடனுக்குக் காட்சி தந்த நரசிம்மர்
    X

    வேடனுக்குக் காட்சி தந்த நரசிம்மர்

    நரசிம்மர் தன் மீது மிகுந்த பக்தி கொண்ட ஒரு வேடனுடைய பக்தியை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி உள்ளார். அந்த கதையை பார்க்கலாம்.
    நரசிம்மர் தன் மீது மிகுந்த பக்தி கொண்ட ஒரு வேடனுடைய பக்தியை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி உள்ளார். ஆதிசங்கரருடைய சீடன் பத்மபாதர் நரசிம்ம உபாசகர். தியானத்தில் அடிக்கடி ஈடுபடுவார்.

    ஒருவேடன் அவரிடம் தவமிருக்க வேண்டிய காரணம் என்ன? என்று அவரைக் கேட்டபோது அவனுக்குப் புரிய வேண்டி, ஓர் அதிசய மிருகத் தைத் தேடி வந்து தியானம் செய்கிறேன் என்றார்.

    வேடன் விலங்கின் அடையாளம் கேட்க மனித உடம்பும் சிங்க முகமும் கொண்டது என்று கூற, வேடனும் காடெங்கும் தேடி கிடைக்காததால் காட்டுக்கொடிகளைக் கொண்டு தூக்குப்போட்டு இறக்கமுனைந்த போது வேடன் முன் நரசிம்மர் தோன்றினார். காட்டுக் கொடி களைக் கொண்டு அவரைக் கட்டி, வேடன் பத்மபாதர் முன் கொண்டு வந்து காட்டினார்.

    வேடன் கண்ணுக்குப் புலப்பட்ட நரசிம்மர் பத்மபாதர் கண்ணிற்குத் தெரியவில்லை. வேடன் செய்வதறியாது திகைத்த போது நரசிம்மர் கர்ஜனை செய்து குரல் ஒலிமூலம் அவருக்குப் புலப்படுத்தினார்.

    இதே பத்மபாதரை இரண்டு முறை சாவிலிருந்து நரசிம்ம சுவாமி மீட்டதாகவும் புராணங்களில் குறிப்புகள் உள்ளது. ஆதிசங்கரரும் நரசிம்மர் மீது கராவலம் என்ற நூலை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×