search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scene"

    திருநாங்கூரில் 12 சிவபெருமான் அம்பாளுடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழியிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது திருநாங்கூர் கிராமம். சைவ, வைணவ கோயில்கள் அதிகம் கொண்டுள்ள ஆன்மிக தலமான இவ்வூரை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோயில்களும், 12 பிரசித்திபெற்ற சிவாலயங்க ளும் உள்ளன. 

    திருநாங்கூரில் மதங்கா ஸ்ரமத்தில் மதங்க ரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்புசிவபெரு மானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு நடைபெற்ற தாகவும், அதைத்தொடர்ந்து 12சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா நடைபெற்றதாகவும் வரலாற்று குறிப்புகள் உணர்த்துகி ன்றன.130ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த இவ்விழா கடந்த 2016-ம் ஆண்டு முதல் மீண்டும் பெரும் முயற்சியால் நடைபெற்றுவருகிறது.

    தொடர்ந்து 4 ஆண்டுகள் நடந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 ஆண்டுகள் மீண்டும் தடைப்பட்டதால் பக்தர்கள் மனம் வருந்தி னர். இதனிடையே நிகழா ண்டு இவ்விழா மீண்டும் நடைபெற்றது. திருநாங்கூர் ஸ்அஞ்சனாக சமேத மதங்கீசுவர சுவாமி, திருக்காட்டுபள்ளி ரீ அகிலாண்டேசுவரி சமேத ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் யோகாம்பிகை சமேத யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் சொர்ணாம்பிகை சமேத ரீ சொர்ணபுரீஸ்வரசுவாமி, திருநாங்கூர் சந்திராசு அம்பாள் சமேத அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு நற்றுணைநாயகி சமேத நாகநாதசுவாமி, திருநாங்கூர் நம்பிரியான் சமேத நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர் காமாட்சி சமேத கைலாசநாதசுவாமி, திருமேனிக்கூடம் சௌந்தரநாயகி சமேத சுந்தரேசுவரசுவாமி, பெருந்தோட்டம் அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை சுந்தரநாயகி சமேத கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான்கந்து திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர்சுவாமி கோயிலில் எழுந்தருளினர்.

    சிறப்பு வழிபாடுகளு க்குப்பிறகு 12 சுவாமி-அம்பாள்களும் ரிஷப வாக னங்களில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து சுவாமி-அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் வேதபாராயணம் திருமுறைபாராயணம், கைலாயவாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள் நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிகைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் திருவீதியுலா செல்லும் நிகழ்வு இன்று அதிகாலை வரை நடைபெற்றது.

    இதில், அ.தி.மு.க முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாடி. செல்வ முத்துக்குமரன், முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மாமல்லன், நாடி.செந்தமிழன் மற்றும் தி.மு.க.வை சேர்ந்த அல்லிவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முத்துக்குமரன், தி.மு.க நிர்வாகி முத்துக்குமரன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பொறுப்பாளர்கள் எம். என்.ஆர்.ரவி, நெடுஞ்செழியன் நாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி மற்றும் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகி வி.ஆர்.ஏ.அன்பு மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
    ×