என் மலர்

  கிரிக்கெட்

  அய்யர், தவான், கில் அரை சதம் - நியூசிலாந்துக்கு 307 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
  X

  அய்யர், தவான், கில் அரை சதம் - நியூசிலாந்துக்கு 307 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தவான் - சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது.
  • ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சன் 36 ரன்னில் அவுட் ஆனார்.

  இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - சுப்மன்கில் களமிறங்கினார்.

  இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. 50 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் அவுட் ஆனார். அவர் வெளியேறிய அடுத்த ஓவரிலேயே தவான் ஆட்டமிழந்தார். அவர் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்திருந்தார்.

  அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னிலும் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் - சாம்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்சன் 36 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் 80 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் கடைசி நான்கு போட்டியில் ஒரு சதம் உள்பட மூன்று அரை சதம் அடித்துள்ளார்.

  கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 16 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் 3 பவுண்டரி 3 சிக்சர் அடங்கும்.இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.

  Next Story
  ×