search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: சுப்மன் கில், ராகுல், கோலி ஏமாற்றம்
    X

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: சுப்மன் கில், ராகுல், கோலி ஏமாற்றம்

    • சுப்மன்கில் 20 ரன்னில் தய்ஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார்.
    • ராகுல் 22 ரன்னில் காலத் அகமது பந்தில் அவுட் ஆனார்.

    சிட்டகாங்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டாகாங்கில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணி 3 சுழற்பந்து வீரர்களுடனும், இரண்டு வேகப்பந்து வீரர்களுடனும் களம் இறங்கியது. இரு அணியில் விளையாடும் 11 வீரர்கள் வருமாறு:-

    இந்தியா:-லோகேஷ் ராகுல் (கேப்டன்), சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், அஸ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

    சகீப் அல்-ஹசன் (கேப்டன்), நஜிமுல் உசேன், ஜாகீர் உசேன், யாசிர் அலி, முஷ்பிகுர் ரகீம், லிட்டன் தாஸ், நூருல் ஹசன், மெகிதி ஹசன் மிராஸ், தய்ஜுல் இஸ்லாம், காலெத் அகமது, எபாதத் உசேன்

    இந்திய அணி பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், சுப்மன்கில்லும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கமே ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

    சுப்மன்கில் 20 ரன்னில் தய்ஜுல் இஸ்லாம் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 41 ஆக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ராகுலுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார்.

    ராகுல் 22 ரன்னில் காலத் அகமது பந்தில் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 45 ஆக இருந்தது. அடுத்து வந்த விராட் கோலி(1 ரன்) வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

    Next Story
    ×