search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பிலிப்ஸ், சாண்ட்னர் அபார பந்து வீச்சு: வங்காளதேசம் 172 ரன்களில் ஆல் அவுட்
    X

    பிலிப்ஸ், சாண்ட்னர் அபார பந்து வீச்சு: வங்காளதேசம் 172 ரன்களில் ஆல் அவுட்

    • வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

    டாக்கா:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய்- ஜாகிர் ஹசன் களமிறங்கினர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 8 ரன்கள் எடுத்த ஜாகிர் ஹசன் 8 ரன்னில் அவுட் ஆனார். உடனே மஹ்முதுல் ஹசன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

    இறுதியில் வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ், சாண்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×