search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமீர் கான் நடித்த சீக்ரட் சூப்பர் ஸ்டார்: சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை
    X

    அமீர் கான் நடித்த சீக்ரட் சூப்பர் ஸ்டார்: சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை

    பாலிவுட் நாயகன் அமீர் கான் நடிப்பில் இருவாரங்களுக்கு முன்னர் வெளியான ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் சீனாவில் ரூ.509 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
    இந்திய திரைப்படங்களுக்கு சமீபகாலமாக கிழக்காசிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘முத்து’, ‘கபாலி’ ஆகிய படங்கள் ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசூலை வாரிக் குவித்தன.

    இதேபோல், இந்திப் படங்களில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ‘டங்கல்’ படம் சீனாவில் சுமார் 1215 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.



    இந்நிலையில், இருவாரங்களுக்கு முன்னர் வெளியான ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ திரைப்படம் சீனாவில் 509 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் ‘டங்கல்’ படத்தின் வசூல் சாதனையை ‘சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
    Next Story
    ×