என் மலர்

  சினிமா

  நான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன் - ஷாருக் கான்
  X

  நான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன் - ஷாருக் கான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தா அணி நேற்றைய போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் உரிமையாளரான ஷாருக் கான் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். #IPL2018 #KolkataKnightRiders #ShahRukhKhan

  ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  இந்நிலையில், கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக் கான், கொல்கத்தா வீரர்களுக்கு ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

  நான்றாக இருங்கள். எனது விமான டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும், இருப்பினும் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடியது. நீங்களே உங்களை பெருமைபட செய்துள்ளிர்கள். அனைவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டீர்கள். உங்களை எனக்கு பிடிக்கும், நான் சிரித்து கொண்டு தான் இருக்கிறேன். அனைத்து பொழுதுபோக்குக்கும், மிகச்சிறப்பான தருணங்களுக்கு நன்றி. நாம் ஒரு மிகச்சிறந்த அணி

  இவ்வாறு அதில் கூறியுள்ளார். #IPL2018 #KolkataKnightRiders #ShahRukhKhan
  Next Story
  ×