என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கலைப்புலி தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘60 வயது மாநிறம்’ படத்தின் முன்னோட்டம். #60VayaduMaaniram
    இயக்குனர் ராதா மோகன் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘காற்றின் மொழி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அவர் இயக்கியுள்ள மற்றொரு படமான ‘60 வயது மாநிறம்’ வரும் 31-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். 

    படத்தின் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க, அவருக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். 

    படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி, இயக்குநரைப் பாராட்டியுள்ளனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். #60VayaduMaaniram #VikramPrabhu #Indhuja
    அஸ்வின் மாதவன் இயக்கத்தில் அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கதாநாயகியாகவும் அறிமுகமாகும் கலாசல் படத்தின் முன்னோட்டம். #Kalasal
    கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் `கலாசல்'. நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - பாபுகுமார், இசை - நிஜாமுதீன், கலை - கல்லை தேவா, படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா, சண்டைப்பயிற்சி - டேஞ்சர் மணி, நடனம் - கல்யாண், கிரிஷ், தயாரிப்பு நிர்வாகம் - அருள், தயாரிப்பு - பி.சி.பாலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அஸ்வின் மாதவன்.

    பழனியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..

    சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.

    நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்றார். #Kalasal

    கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம். #Kalari #Krishna #VidyaPradeep
    நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரிப்பில் உருவவாகியிருக்கும் படம் ‘களரி’.

    கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.

    படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, 

    ‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள். அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.



    கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.

    உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது என்றார். படம் வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Kalari #Krishna #VidyaPradeep

    களரி படத்தின் டிரைலர்:

    ஆதி நடிப்பில் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் முன்னோட்டம்.
    மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. 

    சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "ஆர் எக்ஸ் 100" என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

    "விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா - ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.

    எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் " ஆர் எக்ஸ் 100" ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.
    லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் முன்னோட்டம். #MerkuThodarchiMalai
    ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. புதுமுக இயக்குநர் லெனின் பாரதி இயக்கி உள்ள இந்த படத்தில் முழுக்கப் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

    தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் தயாரித்ததில் ஆத்ம திருப்தியுடன் இருக்கிறேன். மன நிறைவுடன் இருக்கிறேன் என்று விஜய்சேதுபதி வீடியோ ஒன்றை சமீபத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இப்படம் ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
    ஸ்ரீஹரி இயக்கத்தில் கராத்தே கவுசிக் - குஷ்பு சிங் நடிப்பில் பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் வகையில் உருவாகி இருக்கும் ‘ஆறிலிருந்து 6 வரை’ படத்தின் முன்னோட்டம். #Aarilirunthu6Varai
    ரோ‌ஷன் பிலிம் இன்டர்நே‌ஷனல் நிறுவனம் சார்பில் வி.ரிஷிராஜ் தயாரிக்கும் படம் ‘ஆறிலிருந்து 6 வரை’.

    இதில் கராத்தே கவுசிக் கதாநாயகனாக நடிக்கிறார். குஷ்பு சிங் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜார்ஜ், மிப்பு சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - தேவ், இசை - பெண் இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி, நடனம் - சுரேஷ், படத்தொகுப்பு - சி.எஸ். பிரேம், இணை தயாரிப்பு - டி.எஸ்.எஸ். புரொடக்‌ஷன்ஸ் ரோகன், ஷாலியன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஸ்ரீஹரி.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் சம்பவங்களை கதையாக கொண்ட படம். பாலியல் கொடுமைக்கு பாடம் கற்பிக்கும் கதைக்களம் கொண்டது.



    ஒரு இளம் பெண் அதை எப்படி கையாள்கிறாள் என்பதை திகில் கலந்து சொல்லி இருக்கிறோம். நாயகன், நாயகியை தன்னுடைய ஆசைக்கு பயன்படுத்தலாம் என்ற தப்பான எண்ணத்துடன் பழகுகிறான்.

    ஆனால் அவள் வீட்டுக்கு சென்ற அவன் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதன் பிறகு நடந்தது என்ன? நாயகியை நெருங்கினானா? என்பது கதையின் திடீர் திருப்பம். இந்த படத்துக்காக நாயகி உண்மையாகவே ரத்தம் சிந்தி நடித்து இருக்கிறார். படப்பிடிப்பின் போது காட்டு எருமைகளிடம் இருந்து நாயகியை நாயகன் காப்பாற்றினார்” என்றார். #Aarilirunthu6Varai

    ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' படத்தின் முன்னோட்டம். #NanjamPalaVannam #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'.

    தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர், எடிட்டிங் -  நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம், வசனம் மற்றும் தமிழாக்கம் -A.R.K.ராஜராஜா, தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட்) மெஹபு பாஷா, இயக்கம் - ஸ்ரீகாந்த். 

    படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது,

    இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட், பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். 

    இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார். #NanjamPalaVannam #MaheshBabu #Venkatesh #Samantha #Anjali

    ஜதின் மற்றும் நிஷாந்த் இயக்கத்தில் குரு சேமசுந்தரம் நடிப்பில் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் `ஓடு ராஜா ஓடு' படத்தின் முன்னோட்டம். #OduRajaOdu, Guru Somasundaram
    கேண்டிள் லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மூலன் வழங்கும் படம் `ஓடு ராஜா ஓடு'.

    ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான குரு சோமசுந்தரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில், நாசர், லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    படத்தொகுப்பு - நிஷாந்த் ரவிந்திரன், இசை - தோஷ் நந்தா, ஒளிப்பதிவு - ஜதின் சங்கர் ராஜ் & சுனில் சி.கே., தயாரிப்பு - விஜய் மூலன், இயக்கம் - நிஷாந்த் ரவிந்திரன் & ஜதின் ஷங்கர் ராஜ். 



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குரு சோமசுந்தரம் பேசும் போது, ஒரு சிறிய சம்பவத்தை மையப்படுத்தி, அடுத்தடுத்து காட்சிகள் என்ன என்ற விறுவிறுப்பை கூட்டும் காமெடி படமாக இருக்கும், மெரினாவில் குதிரை சவாரி செய்தால் எப்படி இருக்குமோ, படம் பார்க்கும் போதும் அந்த அனுபவத்தை உணர்வீர்கள் என்றார். 

    டார்க் காமெடி ஜானரில், காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #OduRajaOdu #GuruSomasundaram

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா - யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `கோலமாவு கோகிலா' படத்தின் முன்னோட்டம். #CoCo #KolamavuKokila #Nayanthara
    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கோலமாவு கோகிலா. 

    நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதையில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஹரிஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா, ஆர்.எஸ்.சிவாஜி, நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - அனிருத், படத்தொகுப்பு - ஆர்.நிர்மல், ஒளிப்பதிவு - சிவக்குமார் விஜயன், கலை இயக்குனர் - ஏ.அமரன், ஸ்டில்ஸ் - சித்தராசு, ஆடை வடிவமைப்பு - அனு வர்தன், வீரா பாபு, மேக்கப் - ஷயீக் பாஷா தயாரிப்பு - சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனம் - லைகா புரொடக்‌ஷன்ஸ், எழுத்து, இயக்கம் - நெல்சன் திலீப்குமார்.



    தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #CoCo #KolamavuKokila #Nayanthara

    கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் - ஆசிப் - மேகாலி நடிப்பில் உருவாகி வரும் பாண்டிமுனி படத்தின் முன்னோட்டம். #PandiMuni
    தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் பாண்டிமுனி. இந்த படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் நடைபெற்றது.

    இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.

    ஒளிப்பதிவு - மது அம்பட், இசை - ஸ்ரீகாந்த் தேவா, கலை - ஸ்ரீமான் பாலாஜி, நடனம் - சிவசங்கர், சண்டைப்பயிற்சி - சூப்பர்சுப்பராயன்,  எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கஸ்தூரி ராஜா.



    படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும் போது,

    இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். 

    அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தினோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார். நாங்கள் வெல வெலத்துப் போய்விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. 
    அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை என்றார். #PandiMuni

    இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் காதலில் உருவாகி இருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் முன்னோட்டம். #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson
    யுவன் ஷங்கர் ராஜாவின் `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' மற்றும் ராஜராஜனின் 'கே புரொடக்‌ஷன்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம் `பியார் பிரேமா காதல்'.

    ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், ரைசா வில்சன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ரேகா, ஆனந்த் பாபு, ராஜாராணி பாண்டியன், பொற்கொடி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - எஸ்.மணிக்குமரன், ஒளிப்பதிவு - ராஜா பட்டாசார்ஜி, நடன இயக்குநர் - சல்சா மணி, ஆட வடிவமைப்பு - மகேஷ்வரி சாணக்கியன், சஃப்ரூன் நிசார், கலை இயக்குனர் - இ.தியாகராஜன், தயாரிப்பு மேற்பார்வை - கே.சிவசங்கர், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், துணை இயக்குநர் - விக்னேஷ் சரவணன், எழுத்து, இயக்கம் - இளன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் ஷங்கர் ராஜா பேசும்போது,

    நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன், நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்தது. என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம் பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள் என் படங்களில் வரவில்லை. அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம் பண்ணலாம் என முடிவு செய்தோம். 

    ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல் ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால், செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை செய்தேன். முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி. இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து கொடுத்திருக்கிறார். என்றார். 

    படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. #PyaarPremaKaadhal #HarishKalyan #YuvanShankarRaja

    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.

    ×