என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் `விஸ்வரூபம்-2' படத்தின் முன்னோட்டம். #Vishwaroopam2 #KamalHaasan
    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் `விஸ்வரூபம்-2'.

    கமல்ஹாசன் இயக்கிய நடித்துள்ள இந்த படத்தில் நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடித்துள்ளனர். நாசர், ராகுல் போஸ், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அக்லவாட், ரசல் கோஃப்ரி பேங்ஸ், வகீதா ரெஹ்மான், மிர் சர்வார், தீபக் ஜேதி, ஆனந்த் மகாதேவன், ஜுட் எஸ்.வால்கோ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    இசை - ஜிப்ரான், ஒளிப்பதிவு - சனு வர்கீஸ், ஷம்தத் சய்னுதீன், படத்தொகுப்பு - மகேஷ் நாராயன், விஜய் சங்கர், சண்டைப் பயிற்சியாளர் - பிராஹிம் அச்சபாக்கே, லீ விட்டாகர், ஸ்டீபன் ரிக்டர், விஷுவல் எபெக்ட்ஸ் - அஸ்மிதா பாரதி, ஆடை வடிவமைப்பாளர் - கவுதமி, கதை, திரைக்கதை, இயக்கம் - கமல்ஹாசன்.



    படம் குறித்து கமல்ஹாசன் பேசும்போது,

    “விஸ்வரூபம்-2’ படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி.

    விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10-ந் தேதி திரைக்கு வருகிறது” என்றார். #Vishwaroopam2 #KamalHaasan

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம். #Thadam
    அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

    இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், "தடம்" படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.

    இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

    தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் - இயக்குனர் - மகிழ் திருமேனி, ஒளிப்பதிவு - கோபிநாத், இசை- அருண்ராஜ், ஸ்டண்ட் - ஸ்டண்ட் சிவா, அன்பு, அறிவு, நடனம் - தினேஷ்.
    சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் முன்னோட்டம். #Ghajinikanth #Arya
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’.

    ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேன், காளி வெங்கட், கருணாகரன், முகுல் தேவ், மொட்டை ராஜேந்திரன், சம்பத் ராஜ், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - பாலமுரளிபாலு, ஒளிப்பதிவு - பல்லு, படத்தொகுப்பு - பிரசன்னா ஜி.கே, கலை இயக்குநர் - சுப்ரமணிய சுரேஷ், சண்டைப் பயிற்சியாளர் - அன்பு அறிவ், எழுத்து, இயக்கம் - சன்தோஷ் பி.ஜெயக்குமார்.



    “இது குடும்ப சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கிறது. ஆர்யா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஆர்யாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதற்கு ஏற்ப புதிய கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் ‘கஜினிகாந்த்’ ரசிகர்களை கவரும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    படம் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Ghajinikanth #Arya #Sayyeshaa

    கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சாயிஷா, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜுங்கா' படத்தின் முன்னோட்டம். #Junga #VijaySethupathi
    வி.எஸ்.பி.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் விஜய் சேதுபதி தயாரித்துள்ள படம் `ஜுங்கா'. 

    விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக சாயிஷாவும், முக்கிய கதாபாத்திரங்களில் மடோனா செபாஸ்டியன், சுரேஷ் மேனன், ராதா ரவி, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், நேகா சர்மா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

    ஒளிப்பதிவு - டூட்லி, இசை - சித்தார்த் விபிண், பாடலாசிரியர் - லலித் ஆனந்த், எடிட்டிங் - வி.ஜே.ஷாபு ஜோசப், நடனம் - ராஜூ சுந்தரம், சண்டைப்பயிற்சி இயக்குநர் - அன்பறிவு, தயாரிப்பு - விஜய் சேதுபதி, வெளியீடு - ஏ & பி குரூப்ஸ், எழுத்து, இயக்கம் - கோகுல். 



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குநர் கோகுல் பேசுகையில், 

    ‘இது கஞ்ச டான் பற்றிய கதை. கஞ்ச டானாக நடிக்கும் விஜய் சேதுபதி, அவருடைய லட்சியத்தை அடைய வெளிநாட்டிற்கு செல்லவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுகிறது. அங்கு சென்று தன்னுடைய கேரக்டரை மாற்றிக் கொள்ளாமல் வெற்றிப் பெற்றாரா? இல்லையா? என்பது தான் ஜுங்காவின் திரைக்கதை. இது முழுக்க முழுக்க காமெடி படம். ஆனால் ஆக்சன் கலந்த காமெடி படம் என்று சொல்லலாம்' என்றார். 

    படம் வருகிற ஜூலை 27-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. #Junga #VijaySethupathi

    ஜுங்கா டிரைலர்:

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம். #NatpunaEnnanuTheriyuma
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    படம் வருகிற ஜூலை 20-ல் ரிலீசாக இருக்கிறது. #NatpunaEnnanuTheriyuma #Kavin #RemyaNambeesan

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் முன்னோட்டம். #SemmaBothaAagathey #Atharvaa
    கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அதர்வா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `செம போத ஆகாதே'.

    அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மிஷ்டி, அனைகா சோதி நாயகிகளாக நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டிங் - பிரவீன் கே.எல், பாடல்கள் - பத்ரி வெங்கடேஷ், ஜி.ரோகேஷ், கே.ஜி.ரஞ்சித், நிரஞ்சன் பாரதி, கலை இயக்குநர் - எஸ்.எஸ்.மூர்த்தி, உடை வடிவமைப்பாளர் - ஷோபா முரளி, சண்டை பயிற்சியாளர் - திலீப் சுப்பராயன், தயாரிப்பு - கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், வசனம் - ஜி.ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, இயக்கம் - பத்ரி வெங்கடேஷ்.



    பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அதர்வா பேசும் போது, 

    “ படவிழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

    படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.”

    படம் ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #SemmaBothaAagathey #Atharvaa 
    ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆந்திரா மெஸ்’ படத்தின் முன்னோட்டம். #AndhraMess
    ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் ஜெய் கூறும் போது,

    வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது ஆகியோர் தேவராஜ் என்கிற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். ஒரு தருணத்தில் வரது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அவனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கிற தொடர்ச்சியான சம்பவங்கள் வரதுவின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனால் அவன், தேவராஜிடம் இருந்து பிரிவதற்கு முடிவெடுக்கிறான்.

    சில சம்பவங்களால் வரது மற்றும் அவனது சகாக்கள் அனைவரும் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிற பழமைவாதியான ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரின் அழகிய மனைவியிடம் தஞ்சம் அடைகிறார்கள். அங்கேயே சில நாட்கள் தற்காலிமாக தங்கி பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து யோசிக்கிறார்கள். அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பாதையை காண்பிக்கிறது.



    இந்த நான்கு பேரும் பழையதை எல்லாம் மறந்து விட்டு புத்தம் புதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். ஆனாலும், இவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று தேவராஜ் தேடிக்கொண்டிருக்கிறான். வரது மற்றும் அவனது சகாக்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? தேவராஜ் அவர்களை என்ன செய்தான்? என்பதே படத்தின் கதை.

    ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை முகேஷ்.ஜி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரபாகர் கவனிக்கிறார். குட்டி ரேவதி, மோகன் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்." என்றார். 
    சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படத்தின் முன்னோட்டம். #TikTikTik #JayamRavi
    நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள படம் `டிக் டிக் டிக்'. 

    இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இசை - டி.இமான், எடிட்டிங் - பிரதீப் இ.ராகவ், பாடல்கள் - மதன் கார்க்கி, தயாரிப்பு - நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக், ஒளிப்பதிவு - எஸ்.வெங்கடேஷ், கதை, திரைக்கதை, எழுத்து, இயக்கம் - சக்தி சவுந்தர் ராஜன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இமான் பேசும்போது, 

    ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்கு பின்னால் வரும் இரண்டு ஜீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஜீரோவிற்கு பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தை தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன். 

    அதே போல் என்னுடைய இசை பயணத்தில் என்னுடைய இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நூறாவது படமான இதில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதுபோல், யுவனின் நூறாவது படத்தில் நான் பாடி இருக்கிறேன். இது எதிர்பாராத விதத்தில் அமைந்த விஷயம்’ என்றார்.

    படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #TikTikTik #JayamRavi

    விஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலிசோடா-2’ படத்தின் முன்னோட்டம். #GoliSoda2
    ரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கோலிசோடா-2’.

    இதில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன் சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

    இசை - அச்சு, எடிட்டிங் - தீபக், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், கலை - ஜனார்த்தனன், பாடல்கள் - மதன் கார்க்கி, மணி அமுதவன், தயாரிப்பு - பரத்சீனி, ஒளிப்பதிவு, இயக்கம் - எஸ்.டி.விஜய் மில்டன்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்....

    “ இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    கவுதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கதையை நான் எழுதும் போதே அவரை மனதில் வைத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன். இது ஒரு கவுரவ பாத்திரமாக இருந்தாலும் கதையை முன்நோக்கி கொண்டு செல்லும் பாத்திரம். படத்தில் அவர் நடித்தது பெரும் மகிழ்ச்சி. நான் நினைத்ததைவிட ‘கோலி சோடா-2’ சிறப்பாக உருவாகி இருக்கிறது” என்றார். #GoliSoda2

    ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா - நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிப்பில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் முன்னோட்டம். #CharlieChaplin2 #Prabhudeva
    டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின்- 2’.

    இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ ஷர்மா நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, வைபவ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சவுந்தர்ராஜன், இசை - அம்ரீஷ், பாடல்கள் - யுகபாரதி, பிரபுதேவா, கலை - ஆர்.கே.விஜய் முருகன், நடனம் - ஜானி, எடிட்டிங் - பென்னி, வசனம் - ‌ஷக்தி சிதம்பரம், ஸ்டண்ட் - கனல் கண்ணன், தயாரிப்பு - டி.சிவா, கதை, திரைக்கதை, இயக்கம் - ‌ஷக்தி சிதம்பரம்.‘சார்லி சாப்ளின்’ முதல் பாகத்தையும் இவர் தான் இயக்கினார். அவரிடம் படம் பற்றி கேட்ட போது....



    “பிரபு தேவா நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திரு மணம் நடக்க இருக்கிறது. அதற்காக இரண்டு பேரின் குடும்பத்தினரும் திருப்பதிக்கு போகிறார்கள். அப்போது நடக்கும் சம்பவங் களின் கலகலப்பான தொகுப்பே ‘சார்லி சாப்ளின்-2’ திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்” என்றார்.

    படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #CharlieChaplin2 #Prabhudeva

    எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் முன்னோட்டம். #Panjumittai #MakaPaAnand
    தீபம் சினிமா வழங்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’.

    இதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.

    படம் பற்றி இயக்குநர் பேசியதாவது,

    இயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்த யுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.



    2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    டி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணிபுரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார். #Panjumittai #MaKaPaAnand

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா சய்கல் நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தி கிராம பின்னணியில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம். #KadaikuttySingam #Karthi
    2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. 

    முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, பிரியா பவானி ‌ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பானுப்ரியா சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.



    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இசை - டி.இமான், கலை - வீரசமர், படத்தொகுப்பு - ரூபன், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, எழுத்து, இயக்கம் - பாண்டிராஜ்.

    “ இந்த படத்தில் கார்த்தி மாதம் ரூ.1½ லட்சம் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். என்ஜினீயர், டாக்டர் போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் முதல் பல இடங்களில் பெருமையாக எழுதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.



    இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐ.டி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

    படம் வருகிற ஜூலையில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi

    ×