search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makapa Anand"

    மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூஷா குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாணிக்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Maaniik
    மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாணிக்’. இதில் இவருக்கு ஜோடியாக சூஷா குமார் நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

    தரண்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மார்டின் இயக்கியுள்ளார். காமெடி கலந்த பேண்டசி படமாக மாணிக் உருவாகி இருக்கிறது. இப்படம் ஜனவரி 4ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.



    “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு வி‌ஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா? என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
    மாகாபா ஆனந்த், செண்ட்ராயன், நிகிலா விமல் நடிப்பில் மோகன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் விமர்சனம். #Panjumittai #PanjumittaiReview
    ஊரில் மாகாபா ஆனந்தும், செண்ட்ராயனும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். மாகாபா ஆனந்திற்கு அதே ஊரில் இருக்கும் நிகிலா விமலுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு மனைவி நிகிலாவை சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார். போகும் போது செண்ட்ராயனுக்கு சொல்லாமல் சென்று விடுகிறார்.

    மாகாபா ஆனந்த் எங்கு இருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டு, செண்ட்ராயனும் சென்னைக்கு வருகிறார். மாகாபா ஆனந்தின் மனைவி நிகிலாவிற்கு மஞ்சள் கலர் என்றால் மிகவும் பிடிக்கும். இதை மாகாபா ஆனந்திடம் சொல்லுகிறார். ஆனால், இவர்களை சந்திக்க செண்ட்ராயன் மஞ்சள் கலரில் துணி அணிந்துக் கொண்டு அவர்கள் வீட்டு வருகிறார்.

    இதைப்பார்த்து மாகாபா ஆனந்த் கடுப்பாகிறார். இவர்கள் வீட்டிலேயே தங்க செண்ட்ராயன் முயற்சிக்கிறார். ஆனால், மாகாபா அவரை வெளியே அனுப்பி விடுகிறார். பின்னர், தன் மனைவி மஞ்சள் கலர் பிடிக்கும் என்று என்னிடம் தான் சொன்னார். அவனுக்கு எப்படி தெரிந்தது என்று குழப்பமடைகிறார். மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டை போடுகிறார்.



    இதனால் சில நாட்கள் மனைவியை பிரிகிறார். பின்னர், சமாதானம் ஆகி, எனக்கு மஞ்சள் கலர் இனிமேல் பிடிக்காது. புளு கலர்தான் பிடிக்கும் என்று மாகாபாவிடம் கூறுகிறார். மறுநாள் செண்டராயன் புளு கலரில் துணி அணிந்து வருகிறார்.

    இந்த விஷயம், செண்ட்ராயனுக்கு மீண்டும் எப்படி தெரிந்தது என்று இவர்களுக்கு சண்டை ஏற்படுகிறது. இனிமேல் எனக்கு கலரே பிடிக்காது என்று நிகிலா சொல்ல, கலரே இல்லாமல் வெள்ளை கலரை செண்ட்ராயன் அணிந்து வருகிறார். இதனால் மீண்டும் இவர்களுக்குள் பிரச்சனை எழுகிறது. 

    இதன் காரணமாக மாகாபா ஆனந்திற்கும், செண்ட்ராயனுக்கும் நட்பு முறிகிறது. இதன் பின், சில நாட்களில் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் செண்ட்ராயன். 



    இறுதியில் செண்ட்ராயன் மனநலம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்ன? மாகாபா ஆனந்தும், நிகிலாவும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மாகாபா ஆனந்த், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்பா, மனைவியா என்று குழப்பத்திலும், கோபத்திலும், என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பவராக நடித்திருக்கிறார். செண்ட்ராயனின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. கலராக வருவதும் சரி, பிற்பாதில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவும் சரி நடிப்பால் மனதை கவர்ந்திருக்கிறார். 

    நாயகியாக வரும் நிகிலா விமல் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். எப்போ பார்த்தாலும் சாப்பிட்டுக்கிட்டு, வெகுளித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மனநல மருத்துவராக வரும் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் மிளிர்கிறார்.



    குறும்படமாக வெளியான இந்த கதையை, தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் மோகன். படத்தின் கடைசி 20 நிமிடம் தவிர படத்தை மற்ற காட்சிகளை அதிகமாக ரசிக்க முடியவில்லை. சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். 

    இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாகவும் படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையை ரசிக்க வைத்திருக்கிறார். மகேஷ் கே தேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பஞ்சுமிட்டாய்’ சுவை குறைவு.
    சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் மா.கா.பா.ஆனந்த், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என நினைத்தேன் என்று கூறியிருக்கிறார். #MakapaAnand
    டி.வி.யில் இருந்து சினிமாவுக்கு வந்து தனக்கான இடத்தை அடைய போராடிக்கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் நடித்த பஞ்சுமிட்டாய் படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அவரிடம் பேசியதில் இருந்து...

    ‘இந்த படம் தமிழுக்கு ஒரு புது முயற்சியாக மாய யதார்த்தம் என்னும் வகையில் எடுக்கப்பட்ட படம். ஆங்கில படங்களை போல மனிதர்களையும் அனிமே‌ஷன்களையும் இணைத்து எழுதப்பட்ட கதை. இந்த படத்துக்கான படப்பிடிப்பை ’கூவம் முதல் திருவண்ணாமலை வரை’ பல சிரமமான சூழ்நிலைகளிலும் இடங்களிலும் தான் எடுத்தோம். பெரும் போராட்டத்துக்கு பின் தான் படம் வெளியாகிறது. ஆனால் ரசிகர்களுக்கு முழு திருப்தியை தரும் படமாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளான புரிதல் சிக்கல்களை பேசுவதால் படம் பார்ப்பவர்கள் நிச்சயம் தங்கள் வாழ்க்கையை கதையோடு ஒன்றிணைத்துக் கொள்வார்கள். யாரையும் ஏமாற்றாது.

    உங்கள் படங்கள் எல்லாமே வெளியாகும்போது ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்குகிறதே?

    இதில் என்னுடைய தவறு எதுவுமே இல்லை. எனக்கு தரப்பட்ட வேலையை சரியாக செய்து கொடுத்து விடுகிறேன். அதன்பின் அந்த படம் அந்த தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். சந்தைபடுத்துதல் அவரின் சூழ்நிலையை பொறுத்து தான் அமைகிறது. இங்கே ஒரு படத்தை எடுப்பதை விட அது சரியாக ரசிகனை சென்று அடைய பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. நான் அறிமுக நிலையில் இருப்பதால் இது தொடர்கிறது என நினைக்கிறேன்.



    டிவி, சினிமா இரண்டையும் ஒரே நேரத்தில் பயணிக்க திட்டமா?

    இரண்டிலுமே பயணிக்க தான் ஆசைப்படுகிறேன். பாண்டிராஜ், தம்பி ராமையா என்று எனது தந்தை இடத்தில் இருப்பவர்களிடம் ஆலோசனைகள் அறிவுரைகள் பெற்றுக் கொள்கிறேன். எல்லாவற்றையும் முயற்சிக்க சொல்கிறார்கள். எனக்கு சினிமா இதுவரை முழுநேர பணியாக மாறவில்லை. டிவிக்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். வாய்ப்பு வருகிற படங்களில் நடிக்கிறேன்.

    ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்று நினைத்தேன். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கிறேன். நண்பராக நடிக்க வைக்க அவர்கள்தான் யோசித்தார்கள். ஆனால் நான் யோசிக்கவில்லை. கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்கவில்லை. எந்த வேடமாக இருந்தாலும் சரி. தயாராக இருக்கிறேன்.
    எஸ்.பி.மோகன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - நிகிலா விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பஞ்சுமிட்டாய்’ படத்தின் முன்னோட்டம். #Panjumittai #MakaPaAnand
    தீபம் சினிமா வழங்கும் படம் ‘பஞ்சுமிட்டாய்’.

    இதில் மா.கா.பா.ஆனந்த் நாயகனாக நடிக்கிறார். நிகிலா விமல் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சென்ட்ராயன், பாண்டியராஜன், தவசி, வித்யுலேகா, பாண்டு, அர்ஜுனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இசை - டி.இமான், ஒளிப்பதிவு - மகேஷ் கே.தேவ். திரைக்கதை - ஜே.பி.சாணக்யா, எழில்வரதன், கோபாலகிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார். தயாரிப்பு - எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார். இயக்கம் - எஸ்.பி.மோகன்.

    படம் பற்றி இயக்குநர் பேசியதாவது,

    இயல்பாக நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை முதல் முறையாக, மாய யதார்த்த யுத்தியில் சொல்லி இருக்கும் கதை ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கிராமத்தில் இருந்து சென்னை வரும் புரோட்டா மாஸ்டர். சென்ட்ராயன் சென்னையை சேர்ந்த டீ மாஸ்டர். ஆனந்த் ஜோடியாக வரும் நிகிலா கிராமத்து பெண்.



    2 நண்பர்கள், கணவன் - மனைவி உறவு, குடும்பம், சென்னை வாழ்க்கை, கிராம சூழ்நிலை ஆகியவற்றை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கி இருக்கிறோம். எல்லா மனித உணர்வுகளும் வயது வித்தியாசம் இல்லாமல் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

    டி.இமான் இசையில் முதல் முறையாக உருவான முதல்-இரவு பாடல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான மாய காட்சிகளை ‘2.0’ படத்தில் பணிபுரியும் சீனிவாசமோகன் அமைத்திருக்கிறார். பஞ்சுமிட்டாய் படத்தை பார்த்த இயக்குனர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் மிகவும் பாராட்டினார்கள்” என்றார். #Panjumittai #MaKaPaAnand

    ×