என் மலர்

  நீங்கள் தேடியது "Santosh P jayakumar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `கஜினிகாந்த்' படத்தின் விமர்சனம். #GhajinikanthReview #Arya
  ஆர்யாவின் அப்பாவான ஆடுகளம் நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். அவர் தனது மனைவியுடன் தர்மத்தின் தலைவன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தியேட்டரில் வைத்தே ஆர்யா பிறக்கிறார். இதையடுத்து, தனது மகன் ஆர்யாவுக்கு ரஜினிகாந்த் என்றே பெயர் வைக்கிறார். ஆர்யா வளர வளர, அவருடன் மறதி நோயும் சேர்ந்தே வளர்கிறது.

  ஆர்யா ஒரு வேலையில் இருக்கும் போது, யாராவது அவரை அழைத்தாலே, அல்லது அவரிடம் ஏதாவது சொன்னாலோ தான் முன்பு செய்த வேலையை மறந்து அப்படியே விட்டுவிட்டு, சென்று விடுவார். இதையடுத்து நீ ரஜினிகாந்த் இல்லை, கஜினிகாந்த் என்று அனைவரும் ஆர்யாவை கிண்டல் செய்கின்றனர்.   இப்படி மறதி நோயுடன், பெரிய ஆளாகும் ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யும் நரேன் பெண் தேடி வருகிறார்.ஆனால் ஆர்யாவின் குறையை காரணம் காட்டி யாரும் அவருக்கு பெண் தர முன்வரவில்லை. இந்த நிலையில், சாயிஷாவை, ஆர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. 

  அதில் சாயிஷாவின் அப்பாவான சம்பத் ஆர்யாவை சந்திக்க வருகிறார். ஆனால் அவரை சந்திக்க வேண்டும் என்பதையே ஆர்யா மறந்துவிடுகிறார். வெகுநேரம் காத்திருந்துவிட்டு, ஆர்யா வராத கோபத்தில் சம்பத் திரும்பி செல்கிறார். அவரை சமாதானப்படுத்த செல்லும் ஆர்யா, தனது மறதி பற்றி சம்பத்திடம் சொல்ல, தனது மகளை ஆர்யாவுக்கு திருமணம் செய்த தர முடியாது என்று சம்பத்தும் கைவிரித்துவிடுகிறார்.   இதையடுத்து, சாயிஷாவை சந்திக்கும் ஆர்யாவுக்கு, அவள் மீது காதல் வருகிறது. தனது காதலை சாயிஷாவிடம் சொல்லி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இருப்பினும் தனக்கு மறதி இருப்பதை சாயிஷாவிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார் ஆர்யா. இதற்கிடையே சாயிஷாவை திருமணம் செய்து கொள்ள போலீஸ்காரரான சாயிஷாவின் சொந்தக்காரர் ஒருவரும் முயற்சி செய்து வருகிறார்.

  இவ்வாறாக தனக்கு இருக்கும் மறதி பிரச்சனையை ஆர்யா எப்படி சமாளிக்கிறார்? சாயிஷாவுடன் கரம்பிடிக்க அவர் மேற்கொள்ளும் போராட்டம்? அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.  நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆர்யா மீண்டும் முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு அப்பாவித்தனமான ஆர்யாவை இந்த படத்தில் பார்க்க முடிகிறது. தனது வழக்கமான ஆர்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். காமெடியிலும் கலக்கியிருக்கிறார்.

  சாயிஷாவுக்கு இந்த வருடம் வெற்றிகரமாக அமைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஆர்யாவுடனான காதல், கொஞ்சும் காட்சிகளில் சாயிஷா ஸ்கோர் செய்திருக்கிறார். பாடல் காட்சிகளில் சொல்லத் தேவையில்லை. தனது நடனத்தால் அனைவரையும் பிரமிக்க வைக்கிறார். கருணாகரன், சதீஷ் இருவருமே சமஅளவில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். ஆர்யாவுடன் இவர்கள் இருவரும் இணையும் காட்சிகளுக்கு சிரிப்பொலியை கேட்க முடிகிறது.   ஆடுகளம் நரேன், உமா பத்மநாபன், சம்பத் என மற்ற கதாபாத்திரங்களும் கிடைத்த இடங்களில் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளனர். காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் ரசிக்க வைத்துள்ளனர்.

  தனது முதல் இரண்டு அடல்ட் காமெடி படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்த சந்தோஷ் பி.ஜெயக்குமார், இந்த முறை குடும்பபாங்கான கதை மூலம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது முதல் 2 படங்களின் சாயல் ஏதும் இன்றி, முற்றிலும் காமெடி படமாக ரசிக்கும்படி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும், அதிலும் சில மாற்றங்களை கொண்டுவந்திருப்பது சிறப்பு. திரைக்கதையும் ரசிக்கும்படியாக இருக்கிறது. அனைத்து கதாபாத்திரங்களையும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார். 

  பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. பல்லு ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. 

  மொத்தத்தில் `கஜினிகாந்த்' கலகலப்பு. #GhajinikanthReview #Arya #Sayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் முன்னோட்டம். #Ghajinikanth #Arya
  ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்து வழங்கும் படம் ‘கஜினிகாந்த்’.

  ஆர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். ஆடுகளம் நரேன், காளி வெங்கட், கருணாகரன், முகுல் தேவ், மொட்டை ராஜேந்திரன், சம்பத் ராஜ், உமா பத்மநாபன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

  இசை - பாலமுரளிபாலு, ஒளிப்பதிவு - பல்லு, படத்தொகுப்பு - பிரசன்னா ஜி.கே, கலை இயக்குநர் - சுப்ரமணிய சுரேஷ், சண்டைப் பயிற்சியாளர் - அன்பு அறிவ், எழுத்து, இயக்கம் - சன்தோஷ் பி.ஜெயக்குமார்.  “இது குடும்ப சென்டிமென்ட், காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கிறது. ஆர்யா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஆர்யாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அதற்கு ஏற்ப புதிய கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் ‘கஜினிகாந்த்’ ரசிகர்களை கவரும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

  படம் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Ghajinikanth #Arya #Sayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்-2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம் என்று பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, ஆர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். #Ghajinikanth #Arya
  சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் கஜினிகாந்த் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

  இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு.கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார், ஜி. கே.பிரசன்னா, பாபா பாஸ்கர், பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், ஆர்யா, சயீஷா, நிலீமா ராணி, லிங்கேஸ்வரன், சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், 

  ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்-2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.’ என்றார். #Ghajinikanth #Arya

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. #Ghajinikanth #Arya
  சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. 

  இந்த நிலையில், சன்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக இயக்கியிருக்கும் `கஜினிகாந்த்' படம் தணிக்கை குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான `ஹரஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு படங்களுக்கும் தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழே கிடைத்த நிலையில், முதல்முறையாக அவரது படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.   இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா முன்னணி கதாபாத்திரத்திலும், கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், சம்பத், ஆடுகளம் நரேன், உமா பத்மநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 

  ஸ்டூடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி இசை அமைத்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Ghajinikanth #Arya #Sayyeshaa

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கஜினிகாந்த் படத்தில் நடித்து வரும் ஆர்யா, ஏ சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். #Arya #Ghajinikanth
  ஆர்யா கையில் கஜினிகாந்த், சந்தனதேவன் இரண்டு படங்கள் தான் இருக்கின்றன. ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிகழ்ச்சி முடிவில் தான் யாரையும் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

  இது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டிவிக்கு வந்தது பற்றி ஆர்யா கூறும்போது எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சியை போன்றது அல்ல. என் சொந்த வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு முக்கியமான நிகழ்ச்சி என்பது தெரிந்தேதான் ஒப்புக்கொண்டேன்.  நீங்கள் டிவியில் பார்த்தது குறைவுதான். கேமராவுக்கு பின்பு நடந்த நிறைய சம்பவங்கள் என்னை அப்படி ஒரு முடிவு எடுக்க வைத்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை இயக்கிய சந்தோஷ் இயக்கத்தில் நடிப்பதால் அடல்ட் படத்தில் நடிப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். ஏ சான்றிதழ் வாங்கும் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. நடிக்கவும் மாட்டேன். இரும்புத்திரையில் அர்ஜுன் செய்த அந்த வேடத்தின் முக்கியத்துவம் கருதியே நான் மறுத்தேன். அர்ஜுன் பேசிய வசனங்களை நான் பேசி இருந்தால் மக்கள் சிரித்து இருப்பார்கள்’. #Arya #Ghajinikanth

  ×