என் மலர்
சினிமா
X
ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் சென்சார் வெளியீடு
Byமாலை மலர்31 May 2018 11:14 AM IST (Updated: 31 May 2018 11:14 AM IST)
சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், தணிக்கை குழுவில் படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. #Ghajinikanth #Arya
சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கடைசியாக வெளியான `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரத்தில் படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்த நிலையில், சன்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக இயக்கியிருக்கும் `கஜினிகாந்த்' படம் தணிக்கை குழுவில் `யு' சான்றிதழை பெற்றுள்ளது. சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான `ஹரஹர மகாதேவகி', `இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு படங்களுக்கும் தணிக்கை குழுவில் `ஏ' சான்றிதழே கிடைத்த நிலையில், முதல்முறையாக அவரது படத்திற்கு `யு' சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஆர்யா, சாயிஷா முன்னணி கதாபாத்திரத்திலும், கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், மொட்டை ராஜேந்திரன், சம்பத், ஆடுகளம் நரேன், உமா பத்மநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோகிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி இசை அமைத்திருக்கிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Ghajinikanth #Arya #Sayyeshaa
Next Story
×
X