என் மலர்

  சினிமா

  எங்க வீட்டு மாப்பிள்ளை வேண்டாம் - ஆர்யாவிடம் கபிலன் வைரமுத்து கோரிக்கை
  X

  எங்க வீட்டு மாப்பிள்ளை வேண்டாம் - ஆர்யாவிடம் கபிலன் வைரமுத்து கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்-2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம் என்று பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, ஆர்யாவிடம் கோரிக்கை வைத்துள்ளார். #Ghajinikanth #Arya
  சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா - சாயிஷா நடிப்பில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் கஜினிகாந்த் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

  இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு.கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமார், ஜி. கே.பிரசன்னா, பாபா பாஸ்கர், பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், ஆர்யா, சயீஷா, நிலீமா ராணி, லிங்கேஸ்வரன், சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியில் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், 

  ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்-2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.’ என்றார். #Ghajinikanth #Arya

  Next Story
  ×