search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ambika"

    • 80-களின் காலக்கட்டத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்த அம்பிகா.
    • தற்போது பாலியல் குற்றங்களை கண்டித்து நடிகை அம்பிகா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் 1980-களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த அம்பிகா, அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து இருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அம்பிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

    அம்பிகா

    அம்பிகா

     

    இந்நிலையில் புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை காவல் துறை சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டதற்கு நடிகை அம்பிகா சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

    அம்பிகா

    அம்பிகா

     

    அதில் ''பாலியல் குற்றங்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ இருந்தாலும் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். சிறாராக இருந்தாலும் சரி 100 வயது உடையவராக இருந்தாலும் சரி குற்றம் குற்றமே" என்று கூறியுள்ளார். அம்பிகாவின் பரிந்துரைக்கு காவல் துறை நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளது.

    அஸ்வின் மாதவன் இயக்கத்தில் அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கதாநாயகியாகவும் அறிமுகமாகும் கலாசல் படத்தின் முன்னோட்டம். #Kalasal
    கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.பாலு தயாரிக்கும் படம் `கலாசல்'. நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாகவும், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - பாபுகுமார், இசை - நிஜாமுதீன், கலை - கல்லை தேவா, படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா, சண்டைப்பயிற்சி - டேஞ்சர் மணி, நடனம் - கல்யாண், கிரிஷ், தயாரிப்பு நிர்வாகம் - அருள், தயாரிப்பு - பி.சி.பாலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அஸ்வின் மாதவன்.

    பழனியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற்று வருகிறது.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது..

    சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

    படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு, வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.

    நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை என்றார். #Kalasal

    விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் - ரோகிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிராபிக் ராமசாமி' படத்தின் விமர்சனம். #TrafficRamasamy #SAChandrasekar
    டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை விஜய் சேதுபதி படிக்க, அது திரையில் படமாக நகர்கிறது. கதையில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி ரோகிணி மற்றும் தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார் டிராபிக் ராமசாமி. 

    தனது கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் டிராபிக் ராமசாமி முதலில் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், அவர் அளிக்கும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் மதிப்பில்லாமல் போக, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடுகிறார். 



    தொடக்கத்தில் சிறிய சிறிய பிரச்சனைகளை கையில் எடுக்கும் டிராபிக் ராமசாமி அதில் வெற்றியும் காண்கிறார். இந்த நிலையில், நகர்ப் புறத்தில் மீன்பாடி வண்டிகளால் நிறைய உயிரிழப்பு ஏற்படுவதாக உணர்கிறார். மீன்பாடி வண்டிகளை ஓட்டக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி ஓட்டலாம் என்று கோபப்படும் டிராபிக் ராமசாமி, இதுகுறித்து ஒரு கணக்கெடுப்பும் நடத்துகிறார். அதில் நிறைய பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வருகிறது. 

    இந்த நிலையில், டிராபிக் ராமசாமிக்கும், ரவுடியான ஆர்.கே.சுரேஷுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொதுநலனுக்கா போராடும் டிராபிக் ராமசாமியையும் போலீசார் தாக்குவதால், அவர் மீது ஆர்.கே.சுரேஷுக்கு பரிதாபம் ஏற்படுகிறது. இதையடுத்து ராமசாமிக்கு அவர் சிறிய சிறய உதவிகளையும் செய்ய முன்வருகிறார். 

    இதில் மீன்பாடி வழக்கில் தொடர்புடையதாக சம்பந்தப்பட்ட அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்கிறார். இதேபோல் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் டிராபிக் ராமசாமி வழக்கு போடுகிறார்.



    இந்த நிலையில், டிராபிக் ராமசாமியை கொல்ல பலரும் சதி செய்கின்றனர். அவர்களிடமிருந்து டிராபிக் ராமசாமியை ஆர்.கே.சுரேஷ் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆர்கே.சுரேஷயும் கொல்ல சதி நடக்கிறது. 

    கடைசியில், டிராபிக் ராமசாமியின் வழக்குகளுக்கு நீதி கிடைத்ததா? கொலைகாரர்களிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? டிராபிக் ராமசாமியின் பயணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையில், டிராபிக் ராமசாமியையே நினைவுபடுத்துகிறார். அவரது நடையிலும், உடையிலும், ஒவ்வொரு அசைவிலும் டிராபிக் ராமசாமி தெரிகிறார். குறிப்பாக இந்த வயதிலும் சந்திரசேகர் தன்னை வருத்திக் கொண்டே நடித்திருக்கிறார். 



    டிராபிக் ராமசாமியின் மனைவியாக நடித்துள்ள ரோகிணி, காவலராக பிரகாஷ்ராஜ், ரவுடி கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ், வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் என பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். நீதிபதியாக அம்பிகா கலகலக்க வைத்திருக்கிறார். மற்றபடி இமான் அண்ணாச்சி, குஷ்பு, சீமான், மனோபாலா, மதன் பாப் என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றன. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். டிராபிக் ராமசாமியின் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தையும் ரசிக்க வைத்திருக்கிறது.

    டிராபிக் ராமசாமியின் முழு வாழ்க்கையை அப்படியே படமாக எடுக்கவில்லை. மாறாக அவரது வாழ்க்கையில் நடந்த, அவர் சந்தித்த பிரச்சனைகளில் சிலவற்றை, குடும்பம், பாசம், போராட்டம், சமூக நலன் என மாசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்கி. அதுமட்டுமில்லாமல், இந்த காலத்து இளைஞர்கள், கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டால் தான், நாடு திருந்தும், முன்னேறும் என்பதையும் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

    பாலமுரளி பாலு பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. குகன் எஸ்.பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `டிராபிக் ராமசாமி' உத்வேகம். #TrafficRamasamy #SAChandrasekar
    ×