என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் `சர்கார்' படத்தின் முன்னோட்டம். #Sarkar #Vijay #KeerthySuresh
    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `சர்கார்'.

    விஜய் - கீர்த்தி சுரேஷ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி, பிரேம்குமார், துளசி சிவமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஏ.ஆர்.ரஹ்மான், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவு - கிரிஸ் கங்காதரன், கலை இயக்குனர் - டி.சந்தானம், சண்டைப்பயிற்சி - ராம், லக்‌ஷ்மன், நடனம் - பிருந்தா, ஷோபி பால்ராஜ், தயாரிப்பு - கலாநிதி மாறன், தயாரிப்பு நிறுவனம் - சன் பிக்சர்ஸ், எழுத்து - ஏ.ஆர்.முருகதாஸ், ஜெமோகன், இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது,

    விஜய்யுடன் நான் இணைந்த மூன்றாவது படம் சர்கார். முதல் படம் துப்பாக்கி பண்ணும் போது, அவருடைய படங்களை முதலில் பார்துவிட்டு நான் ஒரு கணக்கில் இருந்தேன். என்னுடைய கதையை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் விஜய். அவருடைய திறமைக்கு ஏற்ப ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கத்தி படம் பண்ணோம். இப்போது மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து சர்கார் படம் பண்ணியிருக்கிறேன்.



    இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி என்னால் பெரியதாக சொல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள். படத்தில் விஜய் சார் அவரது நிஜ வாழ்க்கையில் இருப்பது போல் நடித்திருக்கிறார். உங்களுக்கும் அது தோன்றும். ஒவ்வொரு முறையும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது. விஜய் சார் எனக்கு கிடைத்த ஆயுதம். அவரை ஒரு பீரங்கியாக பயன்படுத்தியிருக்கிறேன். என்று கூறியிருந்தார்.

    தீபாவளி பண்டிகை நாளான வருகிற நவம்பர் 6-ஆம் தேதி சர்கார் வெளியாக இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh

    சர்கார் டீசர் பார்க்க:

    வைபவ், சோனம் பாஜ்வா நடிப்பில் டீகே இயக்கத்தில் உருவாகி வரும் ‘காட்டேரி’ படத்தின் முன்னோட்டம். #Katteri #KatteriPreview
    சூர்யா நடித்த ,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடித்த ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’.

    இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம் பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலர் நடிக்கிறார்கள். மேலும், சோனம் பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா உள்ளிட்ட கதாநாயகிகள் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு- விக்கி, இசை- பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமேன்’ என்ற படத்தின் இயக்குநர் டீகே வுடன் இணைந்து பணியாற்றியவர். கலை-செந்தில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-டீகே.

    காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் - நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜீனியஸ்' படத்தின் முன்னோட்டம். #Genius #Roshan
    சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ரோஷன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `ஜீனியஸ்'.

    ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், யோகேஷ், மோனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, பாடல்கள் - வைரமுத்து, படத்தொகுப்பு - தியாகு, ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், கலை இயக்குனர் - ஜி.சி.ஆனந்தன், சண்டைப்பயிற்சி - அன்பறிவ், நடனம் - ஷோபி, லலிதா ஷோபி, உடை - ஆர்.நிருபமா ரகுபதி, தயாரிப்பு - ரோஷன், இணை தயாரிப்பு - ராம், சீனு, பாலாஜி, சாமி, ஜகதீஷ், குணா, தயாரிப்பு நிறுவனம் - சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ், வசனம் - அமுதேஸ்வர், எழுத்து, இயக்கம் - சுசீந்திரன்.

    பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி இயக்குனர் சுசீந்தரன் பேசியதாவது, 



    நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. ஜுனியஸ் கதையாக உருவாகிய பிறகு ஜீனியஸ் கதையை விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர்களால் இதில் நடிக்க முடியவில்லை.

    கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பி.கே படத்தின் பாதிப்பில் தான் நான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். இந்த படம் பி.கே போல மெசேஜ் சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி என்றார்.

    படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #Genius #Roshan

    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் - கீர்த்தி சுரேஷ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `சண்டக்கோழி 2' படத்தின் முன்னோட்டம். #Sandakozhi2 #Vishal #KeerthySuresh
    விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் மற்றும் பென் ஸ்டூடியோஸ் சார்பில் அக்‌ஷய், தவால், ஜெயந்திலால் கடா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சண்டக்கோழி 2'.

    விஷால் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். வில்லியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா, கஞ்சா கறுப்பு, ராம்தாஸ், கபாலி விஷ்வந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மீரா ஜாஸ்மின் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன், ஒளிப்பதிவு - கே.ஏ.சக்திவேல், கலை இயக்குனர் - வி.செல்வகுமார், சண்டைப்பயிற்சி - அனல் அரசு நடனம் - ராஜு சுந்தரம், தயாரிப்பு - விஷால், ஜெயந்திலால் கடா, தயாரிப்பு நிறுவனம் - விஷால் பிலிம் பேக்டரி, பென் ஸ்டூடியோஸ், திரைக்கதை - லிங்குசாமி, பிருந்தா சாரதி, வசனம் - எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் - லிங்குசாமி.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷால் பேசும் போது,

    25 படங்களில் என்னுடன் சேர்ந்து பயணம் செய்த அனைவருக்கும் நன்றி. சண்டக்கோழி எனக்காக எழுதப்பட்ட கதையில்லை. விஜய் அல்லது சூர்யாவுக்காக எழுதப்பட்டது. இந்த மாதிரி ஒரு கதை இருப்பதாக எனக்கு தெரியவந்து நான் தான் லிங்குசாமியிடம் சென்று கேட்டேன். அவர் என்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவா கொண்டு வந்து நிறுத்திவிட்டார். 24 படங்களை முடித்துவிட்டு 25-வதாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்திருக்கிறேன். கண்டிப்பாக இந்த படம் எனது வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். கீர்த்தி உடன் நடித்ததில் பெருமை. 

    தயாரிப்பாளர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். படத்திற்கு விமர்சனம் செய்பவர்கள் தயவுசெய்து 3 நாட்களுக்கு பிறகு விமர்சியுங்கள். அப்போது தான் சிறிய படம் என்றாலும், பெரிய படம் என்றாலும் வரவேற்பு கிடைக்கும். 

    படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Sandakozhi2 #Vishal

    சண்டக்கோழி 2 படத்தின் டீசர்:


    வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `வடசென்னை' படத்தின் முன்னோட்டம். #VadaChennai #Dhanush
    தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை'. 

    வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப், பவல் நவகீதன், சாய் தீனா, சரண் சக்தி, பவர்பாண்டி விக்கி, சோமு உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு - ஜி.பி.வெங்கடேஷ், ஆர்.ராமர், ஒளிப்பதிவு - வேல்ராஜ், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை இயக்குனர் - ஜாக்கி, சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் - ராபர்ட், ஆடை வடிவமைப்பு - அமிர்தா ராம், தயாரிப்பு - தனுஷ், தயாரிப்பு மேற்பார்வை - எஸ்.பி.சொக்கலிங்கம், தயாரிப்பு நிறுவனம் - வுண்டர்பார் பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - வெற்றிமாறன்.



    படம் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் அமீர் பேசும் போது,

    வடசென்னை படத்தில் நடித்தது ஒரு நல்ல அனுபவம். நிறைய கதைகளில் நடிக்க அழைக்கிறார்கள். குறிப்பாக வில்லன் கதாபாத்திரங்கள் அதிகம் வருகிறது. தனுஷின் திறமையை பார்க்கும் போது தான், ஏன் ஒரு இயக்குநர் தொடர்ச்சியாக 3 படங்கள் இயக்குகிறார் என்பது தெரிகிறது. நிச்சயமாக வெற்றிமாறன் என்ற இயக்குநர் வேறு ஒருவரை வைத்து இந்த படத்தை எடுக்க முடியாது. 

    மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற 17-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #VadaChennai #Dhanush 

    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம். #Koothan
    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன். 

    சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.

    அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகியாக் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

    இந்தப்ப்டத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அஷோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு நீல்கரிஸ் முருகன்.

    இப்படம் அக்டோபர் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம். #NatpunaEnnanuTheriyuma
    லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.

    நாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். 

    ஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது...

    “இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.

    பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

    நட்புனா என்னானு தெரியுமா - டீசர்:

    தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் முன்னோட்டம். #AanDevathai #Samuthirakani
    சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை'.

    சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - விஜய் மில்டன், இசை - ஜிப்ரான், படத்தொகுப்பு - மு.காசி விஸ்வநாதன், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, அப்துல் ரஹ்மான், சவுந்தர ராஜன், விவேகா, நடனம் - ஐ.ராதிகா, உடை வடிவமைப்பு - கீர்த்தி வாசன், சோபியா சவுரிராஜன், சண்டைப்பயிற்சி - ரன் ரவி, தயாரிப்பு - அகமது பக்ருதீன், ஷேக் தாவூத், துணை இயக்குநர் - ஞான சத்யா, மஹி வர்மன், இணை இயக்குநர் - அருண் மோகன், கிரிஷ் சிதம்பரம், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.



    படத்தின் நாயகி ரம்யா பாண்டியன் படவாய்ப்பு பற்றி கூறும்போது,

    ’ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான் 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிரா படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே சம்மதம் கூறிவிட்டேன்.

    ஆண் தேவதை படம் வெளியான பின் எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு வி‌ஷயமாவது நம்மை கவர வேண்டும். கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றார். 

    படம் வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    ஆண் தேவதை படத்தின் டீசர்:

    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் `96' படத்தின் முன்னோட்டம். #96TheMovie #VijaySethupathi #Trisha
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `96'. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், வர்ஷா பொலம்மா, தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - மகேந்திரன் ஜெயராஜூ, சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், படத்தொகுப்பு - ஆர்.கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - கார்த்திக் நேதா, உமாதேவி, கார்த்திக் நேத்தா. தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.

    இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றி பிரேம்குமார் கூறும் போது, 



    படத்தின் அனைத்துகட்ட பணிகளும் முடிந்துவிட்டது. விஜய்சேதுபதி இந்த படத்தில் புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். விஜய்சேதுபதி இதுவரை நடித்த படங்களை விட இந்த படம் அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு அனுபவத்தை தரும். படத்தின் பாடல்களும், டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். படமும் நிச்சயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்றார். 

    7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித்குமார் உலகம் முழுவதும் இந்த படத்தை வெளியிடுகிறார். படம் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #96TheMovie #VijaySethupathi #Trisha

    மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம். #Maragathakkaadu
    ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. 

    இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.

    ஒளிப்பதிவு - நட்சத்திர பிரகாஷ், படத்தொகுப்பு - சாபு ஜோசப், சண்டைப் பயிற்சி - மிராக்கிள் மைக்கேல், கலை இயக்குநர் - மார்டின் டைட்டஸ், நடன இயக்குநர் - ஜாய் மதி, இசை - ஜெயப்பிரகாஷ், பாடலாசிரியர்கள் - விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன், ஆடை வடிவமைப்பாளர் - செல்வம், தயாரிப்பு: கே. ரகுநாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மங்களேஸ்வரன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, 

    " இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

    கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார் " என்றார். #Maragathakkaadu 

    மரகதக்காடு படத்தின் டிரைலர்:

    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் முன்னோட்டம். #Jarugandi #Jai
    ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி'.

    ஜெய் - ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - போபோ சசி, ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - ‌ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி - டான் அசோக், நடன இயக்குநர் - அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் - ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு - பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் - பிச்சுமணி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முன்னோட்டம். #ChekkaChivanthaVaanam #CCV
    மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

    இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு - ஸ்ரீகர்பிரசாத், பாடல்கள் - வைரமுத்து, கலை - ‌ஷர் மிஷ்டாராய், சண்டைபயிற்சி - திலீப் சுப்புராயன், எழுத்து - மணிரத்னம், சிவா ஆனந்த், தயாரிப்பு - மணிரத்னம், சுபாஸ்கரன், இயக்கம் - மணிரத்னம். 



    “பிரபல நடிகர்-நடிகைகள் கூட்டணி சேர்ந்துள்ள இந்த படம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. எப்போதுமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை கொடுப்பவர் மணிரத்னம். நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள ‘செக்கச் சிவந்தவானம்’ அனைவரும் ரசிக்கும் எழில் கொஞ்சும் கதையாக உருவாக இருக்கிறது. இது இயக்குனர் மணிரத்னத்தின் புதிய பரிமாணமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

    சமீபத்தில் வெளியாகிய இரண்டு டிரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ChekkaChivanthaVaanam #CCV

    செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் 2:


    செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் 1:

    ×