என் மலர்

  சினிமா

  ஜருகண்டி
  X

  ஜருகண்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் முன்னோட்டம். #Jarugandi #Jai
  ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி'.

  ஜெய் - ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  இசை - போபோ சசி, ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - ‌ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி - டான் அசோக், நடன இயக்குநர் - அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் - ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு - பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் - பிச்சுமணி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

  வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

  நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

  Next Story
  ×