search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jarugandi"

    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனி, ரோபோ சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் விமர்சனம். #Jarugandi #JarugandiReview
    நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். பணம் கட்டாதவர்களின் கார்களை எடுத்து செல்லும் வேலை செய்து வருகிறார். ஒருநாள் கவுன்சிலர் ஒருவரின் காரை தூக்குவதால் அவருடைய வேலை பறிபோகிறது. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் முயற்சி செய்து வருகிறார். 

    டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, பேங்க்கில் லோனுக்கு முயற்சி செய்கிறார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதை நண்பன் டேனியிடம் சொல்ல, அவரோ இளவரசு மூலம் போலி ஆவணங்கள் வைத்து லோன் வாங்குகிறார்.

    அந்த பணத்தை வைத்து கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார் ஜெய். சில நாட்களில் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுக்கு, போலி ஆவணங்கள் வைத்து ஜெய் லோன் வாங்கியது தெரியவருகிறது. 

    ஜெய் மற்றும் டேனியை அழைத்து ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் இந்த பணத்தை இரண்டு நாளில் தரும்படியும் போஸ் வெங்கட் கேட்கிறார்.



    என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில், செல்வந்தரும், நாயகி ரெபா மோனிகாவை காதலிப்பவருமான ரோபோ சங்கரை சந்திக்கிறார்கள். பத்து லட்சம் பணம் தர சம்மதிக்கும் ரோபோ சங்கர், அதற்கு பதிலாக, நாயகி ரெபா மோனிகாவை கடத்தி வர சொல்லுகிறார்.

    இறுதியில் ஜெய், நாயகியை ரெபா மோனிகாவை கடத்தினாரா? போஸ் வெங்கட்டுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜெய்யை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. வழக்கமான வெகுளித்தனமான ஜெய்யாக இல்லாமல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். ஜெய்யின் கதாபாத்திரம் அளவிற்கு டேனி மற்றும் ரோபோ சங்கரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக டேனிக்கு இது பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. போலீசாக வரும் போஸ் வெங்கட், அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.

    கதாநாயகியாக நடித்திருக்கு ரெபா மோனிகா ஜான், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். 



    வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிச்சுமணி. திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். 

    போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘ஜருகண்டி’ ரசிக்கலாம்.
    விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
    தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.

    ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது. 



    இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர். 

    இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil

    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் முன்னோட்டம். #Jarugandi #Jai
    ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி'.

    ஜெய் - ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - போபோ சசி, ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - ‌ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி - டான் அசோக், நடன இயக்குநர் - அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் - ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு - பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் - பிச்சுமணி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    போபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற 
    செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    அதேநோளில் தான் மணிரத்னமின் செக்கச்சிவந்த வானம் படமும், பா.ரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் படமும் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Jarugandi #Jai

    பலூன் படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் படக்குழுவினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். #Jarugandi
    'பலூன்' படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'ஜருகண்டி'. இப்படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கியுள்ளார். நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி ஆகியோர் தயாரித்து வருகிறார்கள்.

    இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இப்படத்தின் டிரைலரை ஜூலை 6ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். 



    இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில் உருவாகியுள்ளது 'ஜருகண்டி'.
    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், 

    பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, சரோஜா என பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.



    படத்தின் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    ×