search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Aan Devathai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் விமர்சனம். #AanDevathaiReview #Samuthirakani
  சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில், ரம்யாவுக்கு ஐடி கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்திற்கு வேலை கிடைக்கிறது. சமுத்திரக்கனி மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கிறார். இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை கவனிக்க முடியாமல் போகிறது.

  இதையடுத்து சமுத்திரக்கனி தனது வேலையை விட்டு குடும்பத்தை பார்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். ரம்யா தனது பணியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சொந்தமாக வீடு, கார் வாங்கும் அளவிற்கு உயர்கிறார். அடுத்தடுத்த கட்டத்திற்கு மேலே செல்ல செல்ல, தனது நட்பு வட்டாரத்துடன் பார்ட்டிக்கு செல்ல தொடங்குகிறார்.  ஒருநாள் பார்ட்டிக்கு சென்று மது அருந்திவிட்டு வரும் ரம்யாவுக்கும், சமுத்திரக்கனிக்கும் இடையே கடுமையாக சண்டை வருகிறது. இதனால் சமுத்திரக்கனி வீட்டை விட்டு வெளியேறி விடுதி ஒன்றில் தங்குகிறார். அவருடன் அவரது மகள் பேபி மோனிகாவும் உடன் செல்கிறாள். 

  கடைசியில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்தார்களா? அவர்களது குடும்பம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.  சமுத்திரக்கனிக்கு என்ன வேடம் கொடுத்தாலும் அந்த வேடமாகவே மாறிவிடுகிறார். மனைவியிடம் பொறுமை, குழந்தைகளிடம் கனிவு என்று வழக்கம் போலவே பொறுப்பான நடிப்பால் தனது கதாபாத்திரத்துக்கு வலுசேர்க்கிறார். ரம்யா பாண்டியனுக்கு சற்று நெகட்டிவ் கலந்த வேடம். சராசரி பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கிறார்.

  சுஜா வருணி, அபிஷேக், ராதாரவி, காளி வெங்கட், ஹரிஷ் பெரடி, அறந்தாங்கி நிஷா, அனுபமா குமார் அனைவருக்குமே பொருத்தமான கதாபாத்திரங்கள். குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா, கவின் இருவரும் சிறப்பான பங்களிப்பு தந்திருக்கிறார்கள்.   இன்றைய இன்றைய சமூகத்துக்கு தேவையான கருத்தை மையமாக வைத்து உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தாமிரா. தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் சண்டையால் சிலர் தற்கொலை முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பாடமாக இந்த படம் இருக்கும். ஆடம்பரத்துக்குள் மாட்டிக்கொள்ளாமல், சாதாரண வாழ்க்கையையே மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்று சொல்ல வருகிறார் இயக்குநர்.

  திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாததால் எளிதில் காட்சிகளை கணிக்க முடிவது பலவீனம். திரைக்கதை மெதுவாக நகர்கிறது. மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தை கவனிக்கும் கணவன் என்ற சுவாரசியமான ஒருவரிக் கதைக்கு இன்னும் சுவாரசியமான திரைக்கதை அமைத்து இருந்தால் ஆண் தேவதையை இன்னும் கொண்டாடி இருக்கலாம். குடும்ப அமைப்பின் அவசியத்தை உணர்த்தியதற்காக ஆண் தேவதையை பாராட்டலாம்.

  ஜிப்ரானின் இசையும், விஜய் மில்டனின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க வைத்திருக்கிறது. 

  மொத்தத்தில் `ஆண் தேவதை' தேவை. #AanDevathaiReview #Samuthirakani

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #AanDevathai #Samuthirakani
  சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை'.

  சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தை நாளை ரிலீஸ் செய்யக் கூடாது என்று படக்குழுவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பட தயாரிப்பு பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில், ரூ22 லட்சத்தை திருப்பி தராததால் படத்துக்கு தடை கோரி நிஜாம் மொய்தீன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Aandevathai #Samuthirakani

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் `ஆண் தேவதை' படத்தில் நடித்துள்ள சுஜா வருணி, படத்தில் இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடித்திருப்பதாக கூறினார். #AanDevathai #SujaVarunee
  சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. சிவாஜி குடும்பத்தில் மருமகளாக செல்ல இருக்கும் சுஜா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `ஆண் தேவதை'.

  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பேரடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகிறது.

  படம் குறித்து சுஜா வருணி பேசும்போது, ’தாமிரா போனில் இந்தக் கதையைச் சொன்னவுடனேயே இதில் நடிக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. அவரோட ‘ரெட்டசுழி’ படமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது.  இந்த படத்தில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப் போகும் பெண்ணாக வருகிறேன். இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னைத் திட்டாமல் படம் பாருங்கள்” என கோரிக்கை விடுத்து இருக்கிறார். #AanDevathai #SujaVarunee

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஆண் தேவதை' படத்தின் முன்னோட்டம். #AanDevathai #Samuthirakani
  சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை'.

  சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  ஒளிப்பதிவு - விஜய் மில்டன், இசை - ஜிப்ரான், படத்தொகுப்பு - மு.காசி விஸ்வநாதன், பாடல்கள் - கார்த்திக் நேத்தா, அப்துல் ரஹ்மான், சவுந்தர ராஜன், விவேகா, நடனம் - ஐ.ராதிகா, உடை வடிவமைப்பு - கீர்த்தி வாசன், சோபியா சவுரிராஜன், சண்டைப்பயிற்சி - ரன் ரவி, தயாரிப்பு - அகமது பக்ருதீன், ஷேக் தாவூத், துணை இயக்குநர் - ஞான சத்யா, மஹி வர்மன், இணை இயக்குநர் - அருண் மோகன், கிரிஷ் சிதம்பரம், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார்.  படத்தின் நாயகி ரம்யா பாண்டியன் படவாய்ப்பு பற்றி கூறும்போது,

  ’ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான் 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிரா படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே சம்மதம் கூறிவிட்டேன்.

  ஆண் தேவதை படம் வெளியான பின் எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு வி‌ஷயமாவது நம்மை கவர வேண்டும். கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றார். 

  படம் வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

  ஆண் தேவதை படத்தின் டீசர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்சேதுபதியின் ‘96’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’ படங்கள் ரிலீசால் மற்ற படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #96TheMovie #NOTA
  தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.

  ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.   இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜருகண்டி, விஷ்ணு விஷாலின் ராட்சசன், விவேக்கின் எழுமின் ஆகிய 5 படங்களையும் திரைக்கு கொண்டுவர அனுமதி வழங்கி அவற்றுக்கு தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டு வந்தன.

  இந்த நிலையில் விஜய்சேதுபதி-திரிஷா நடித்துள்ள ‘96’, விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘நோட்டா’ ஆகிய படங்களும் 5-ந் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் பெரிய படங்கள் என்பதால் மற்ற 5 படங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காமல் அவற்றை தள்ளிவைக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. இந்த படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்தில், புகார் அளித்தனர். 

  இதற்கிடையே விவேக்கின் எழுமின் படம் அக்டோபர் 18-ஆம் தேதிக்கும், உதயாவின் உத்தரவு மகாராஜா படம் அக்டோபர் 26-ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. #96TheMovie #NOTA #ProducersCouncil

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்துள்ள ரம்யா பாண்டியன், மக்களின் மனோபாவம் மாறி வருவதாக கூறியிருக்கிறார். #AanDevathai #RamyaPandiyan
  நடிகை ரம்யா பாண்டியன், அறிமுகமான ஜோக்கர் படத்திலேயே கவனிக்கப்பட்டார். சமுத்திரகனியுடன் அவர் நடித்த ஆண் தேவதை வெளியாக இருக்கிறது. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

  ’ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான் 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிரா படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே சம்மதம் கூறிவிட்டேன்.

  தமிழ் நாட்டு பெண்ணாக இருப்பதில் என்ன லாபம்?

  இயக்குனர் நம்ம ஊர் பொண்ணு என்று சொல்லி என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். படப்பிடிப்புத் தளங்களில் வசனங்களை இன்னும் மெருகேற்றுவார். எனக்கு மொழி பிரச்சினை இல்லாததால் வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈசியாக இருந்தது. சமுத்திரக்கனி செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததற்கும் நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.  குடும்ப தலைவி என்றாலும் இந்தப்படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன். ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப்போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா அடுத்ததா அவங்கள வேறு எந்த கேரக்டர்லயும் பொருத்தி பார்க்குற அளவுக்கு மக்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.

  தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வர தயங்குறாங்கன்னு சொல்றது உண்மையா?

  ஜோக்கர் படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை. நிறைய பேர் நம்பவே இல்லை. இயக்குனர் பா.ரஞ்சித் கூட படம் வெளியாகி ஒரு வருடம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார். மும்பை, கேரளாவில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப் பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.  ஆண் தேவதை படம் வெளியான பின் எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு வி‌ஷயமாவது நம்மை கவர வேண்டும். கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். #AanDevathai #RamyaPandiyan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர், இயக்குநர் என பிசியாகி இருக்கும் சமுத்திரக்கனி தானும் ஒரு எளிய மனிதன் தான், எனது கருத்துக்களை அறிவுரையாக சொல்லவில்லை, அக்கறையாக தான் சொல்கிறேன் என்றார். #Samuthirakani
  நாடோடிகள் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஆண் தேவதை, வெள்ளை யானை 2 படங்களும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

  அவரிடம் சமுத்திரகனி என்றாலே அறிவுரை சொல்பவர் என்ற பிம்பம் விழுந்திருக்கிறதே? என்று கேட்டதற்கு “மத்தவங்க மாதிரி நானும் ஒரு எளிய மனிதன்தான். என்னைப் பொறுத்தவரை அதை அறிவுரையா பார்க்கலை; ஒரு அக்கறையாக தான் பார்க்கிறேன்.

  ஆனால், சமுத்திரக்கனின்னா அறிவுரைனு ஒரு பேரை இவங்களா வெச்சுட்டாங்க. இதை நான் கடமையாகத்தான் நினைக்கிறேன். மாற்றம் நாளைக்கே வந்திடாது; அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம்னு இதைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.  கத்துனா காதுல போய் விழும்னுதான் கத்திக்கிட்டிருக்கேன். அப்படிக் கத்தியும் யாரும் திரும்பலை. அவங்க திரும்புற வரை கத்துறதுதான் என் நோக்கம் என்று கூறினார். #Samuthirakani

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் `ஆண் தேவதை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #AanDevathai #Samuthirakani
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் `ஆண் தேவதை’. முக்கிய கதாபாத்திரங்களில்  ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

  விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

  இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தெரிவித்திருப்பதாவது,

  சில தவிர்க்க இயலாத காரணத்தினால் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற இருந்த ஆண்தேவதை திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று ஆண் தேவதை படக்குழு அறிவித்துள்ளது. 

  சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். #AanDevathai #Samuthirakani

  ×