என் மலர்

  சினிமா

  இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாதோ, அப்படி நடித்திருக்கிறேன் - சுஜா வருணி
  X

  இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாதோ, அப்படி நடித்திருக்கிறேன் - சுஜா வருணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் `ஆண் தேவதை' படத்தில் நடித்துள்ள சுஜா வருணி, படத்தில் இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடித்திருப்பதாக கூறினார். #AanDevathai #SujaVarunee
  சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. சிவாஜி குடும்பத்தில் மருமகளாக செல்ல இருக்கும் சுஜா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் `ஆண் தேவதை'.

  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், ஹரீஷ் பேரடி, அபிஷேக், மாஸ்டர் கவின் பூபதி, பேபி மோனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகிறது.

  படம் குறித்து சுஜா வருணி பேசும்போது, ’தாமிரா போனில் இந்தக் கதையைச் சொன்னவுடனேயே இதில் நடிக்க வேண்டும் என எனக்குத் தோன்றியது. அவரோட ‘ரெட்டசுழி’ படமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் அஞ்சலி கேரக்டரை பார்த்தபோது, ஏன் நமக்கு இப்படியெல்லாம் ஒரு கேரக்டர் வரமாட்டேங்குது என நினைப்பேன். அந்த ஏக்கம் இதில் பூர்த்தியாகி உள்ளது.  இந்த படத்தில் திருமணமாகி ஐடி நிறுவனத்தில் வேலைக்குப் போகும் பெண்ணாக வருகிறேன். இன்றைய சமூகத்தில் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு கெட்ட உதாரணமான பெண்ணாக நடிச்சிருக்கேன். என்னைத் திட்டாமல் படம் பாருங்கள்” என கோரிக்கை விடுத்து இருக்கிறார். #AanDevathai #SujaVarunee

  Next Story
  ×