என் மலர்

  சினிமா

  மக்களின் மனோபாவம் மாறி வருகிறது - ரம்யா பாண்டியன்
  X

  மக்களின் மனோபாவம் மாறி வருகிறது - ரம்யா பாண்டியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக நடித்துள்ள ரம்யா பாண்டியன், மக்களின் மனோபாவம் மாறி வருவதாக கூறியிருக்கிறார். #AanDevathai #RamyaPandiyan
  நடிகை ரம்யா பாண்டியன், அறிமுகமான ஜோக்கர் படத்திலேயே கவனிக்கப்பட்டார். சமுத்திரகனியுடன் அவர் நடித்த ஆண் தேவதை வெளியாக இருக்கிறது. அவர் அளித்த பேட்டியில் இருந்து...

  ’ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான் 'ஆண் தேவதை' படம் பற்றி சொல்லி அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிரா படத்தின் கதையையும், கேரக்டரையும் விரிவாக சொல்லவே சம்மதம் கூறிவிட்டேன்.

  தமிழ் நாட்டு பெண்ணாக இருப்பதில் என்ன லாபம்?

  இயக்குனர் நம்ம ஊர் பொண்ணு என்று சொல்லி என்னை ரொம்ப பாசமாகவே நடத்தி வேலை வாங்கினார். படப்பிடிப்புத் தளங்களில் வசனங்களை இன்னும் மெருகேற்றுவார். எனக்கு மொழி பிரச்சினை இல்லாததால் வசனங்களை உள்வாங்கி நடிக்க ரொம்ப ஈசியாக இருந்தது. சமுத்திரக்கனி செட்ல எந்நேரமும் பரபரப்பா இருப்பார். அவருடன் நடித்த காட்சிகளில் எந்த பதட்டமும் இல்லாமல் நடித்தேன். அந்த அளவுக்கு அவர் எனக்கு உற்சாகம் கொடுத்ததற்கும் நான் தமிழ்ப்பொண்ணு என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.  குடும்ப தலைவி என்றாலும் இந்தப்படத்துல நார்மலா ஐடி வேலைக்கு போற பொண்ணா தான் நடிச்சிருக்கேன். ஒருத்தரை ஒரு கேரக்டர்ல பிடிச்சுப்போய் ரசிச்சு பார்த்தாங்கன்னா அடுத்ததா அவங்கள வேறு எந்த கேரக்டர்லயும் பொருத்தி பார்க்குற அளவுக்கு மக்களோட மனோபாவம் இப்ப மாறிக்கிட்டே வருது. அதனால் ரம்யா பாண்டியன் இப்படித்தான்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயப்பட தேவையில்லை.

  தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வர தயங்குறாங்கன்னு சொல்றது உண்மையா?

  ஜோக்கர் படம் வந்தப்ப ரம்யா பாண்டியனா நான் வெளிய தெரியவே இல்லை. நிறைய பேர் நம்பவே இல்லை. இயக்குனர் பா.ரஞ்சித் கூட படம் வெளியாகி ஒரு வருடம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணுன்னு தான் நினைச்சிட்டு இருந்தாராம். உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார். மும்பை, கேரளாவில் இருந்து ஹீரோயின்கள் வந்த நிலையில் இப்போ கொஞ்சம் மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. காரணம் நம்ம தமிழ்ப் பொண்ணுங்களும் சினிமாவுல இறங்கிட்டு வர்றாங்க.  ஆண் தேவதை படம் வெளியான பின் எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு படத்தில் நடிக்க கதை, கேரக்டர் அல்லது டீம் என ஏதாவது ஒரு வி‌ஷயமாவது நம்மை கவர வேண்டும். கொஞ்ச நேரம் வந்தாலும் கூட, அது ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்கணும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். #AanDevathai #RamyaPandiyan

  Next Story
  ×