என் மலர்
சினிமா

ஒன்று பத்தாகிறது - சமுத்திரக்கனி படக்குழுவின் முக்கிய மாற்றம்
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் `ஆண் தேவதை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #AanDevathai #Samuthirakani
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி - ரம்யா பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் `ஆண் தேவதை’. முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பெராடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜிப்ரான் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் தெரிவித்திருப்பதாவது,
சில தவிர்க்க இயலாத காரணத்தினால் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற இருந்த ஆண்தேவதை திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று ஆண் தேவதை படக்குழு அறிவித்துள்ளது.
VELVOM... pic.twitter.com/XmcgaXFekk
— P.samuthirakani (@thondankani) July 31, 2018
சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். #AanDevathai #Samuthirakani
Next Story






