என் மலர்

    நீங்கள் தேடியது "Naadodigal 2"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர், இயக்குநர் என பிசியாகி இருக்கும் சமுத்திரக்கனி தானும் ஒரு எளிய மனிதன் தான், எனது கருத்துக்களை அறிவுரையாக சொல்லவில்லை, அக்கறையாக தான் சொல்கிறேன் என்றார். #Samuthirakani
    நாடோடிகள் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ஆண் தேவதை, வெள்ளை யானை 2 படங்களும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

    அவரிடம் சமுத்திரகனி என்றாலே அறிவுரை சொல்பவர் என்ற பிம்பம் விழுந்திருக்கிறதே? என்று கேட்டதற்கு “மத்தவங்க மாதிரி நானும் ஒரு எளிய மனிதன்தான். என்னைப் பொறுத்தவரை அதை அறிவுரையா பார்க்கலை; ஒரு அக்கறையாக தான் பார்க்கிறேன்.

    ஆனால், சமுத்திரக்கனின்னா அறிவுரைனு ஒரு பேரை இவங்களா வெச்சுட்டாங்க. இதை நான் கடமையாகத்தான் நினைக்கிறேன். மாற்றம் நாளைக்கே வந்திடாது; அதை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போம்னு இதைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.



    கத்துனா காதுல போய் விழும்னுதான் கத்திக்கிட்டிருக்கேன். அப்படிக் கத்தியும் யாரும் திரும்பலை. அவங்க திரும்புற வரை கத்துறதுதான் என் நோக்கம் என்று கூறினார். #Samuthirakani

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படத்தின் அடுத்த ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் மோகன்லால் வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் மூன்று ஜஸ்ட் லுக்குகளை நடிகர் சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், அடுத்த ஜஸ்ட் லுக்கை நடிகர் மோகன் லால் ஜூலை 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சமுத்திரக்கனி தற்போது கே.விஆனந்த் இயக்கத்தில் சூர்யா படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் ஆர்யா, மோகன்லால் இருவரும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் முதலாவது இரண்டாவது ஜஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், மூன்றாவதாக ஜெயம் ரவி வெளியிட இருக்கிறார். #Naadodigal2
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இரண்டாவது ஜஸ்ட் லுக்கை ஆர்யா வெளியிட்டார்.

    அடுத்ததாக மூன்றாவது ஜஸ்ட் லுக்கை ஜூலை 14ம் தேதி மாலை 5 மணிக்கு ஜெயம்ரவி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 



    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். #Naadodigal2 #Velvom 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படத்தின் இரண்டாவது ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் ஆர்யா வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அடுத்த ஜஸ்ட் லுக்கை ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அசுரவதம் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ள நந்திதா படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக தான் செய்ய தவறியதை பற்றி பேசுவதாகக் கூறி பாலியல் தொல்லை பற்றி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #NanditaSwetha
    அசுரவதம் படத்தில் சசிகுமார் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நந்திதா. 
    இந்த நிலையில், சமூகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவது குறித்தும், அதில் இருந்து எப்படி தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் நந்திதா பேசியதாவது,

    அசுரவதம் படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நான் செய்ய தவறியதை பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் நம்ம குழந்தைகளுக்கு தொல்லை கொடுப்பவர்கள் எந்த ரூபத்தில், எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது ரொம் கஷ்டம். குறிப்பாக பாலியல் தொல்லை. ஒருவருக்குள் அப்படி ஒரு மிருக குணம் இருக்கிறது என்பதை அவர்கள் முகத்தை பார்த்து நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அப்படினா எப்படி நம்ம குழந்தை அதை கண்டுபிடிச்சு அவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும். 

    ரொம்ப கஷ்டம். பொதுவாக ஒரு குழந்தையை தொட்டு, கொஞ்சிப்பேசி, முத்தம் கொடுப்பதை நமது கலாச்சாரத்தில் அவ்வளவு பெரிய தப்பா பார்ப்பதில்லை. அதை தான் பாலியல் தொல்லை கொடுப்பவர்கள் ரொம்ப வசதியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம்ம குழந்தைகளும் அதை புரிந்து கொள்ள முடியாமல் அவர்களுக்கு பலியாகின்றனர். 

    இதை தடுக்க நாம் நமது குழந்தைகளை இந்த மாதிரி ஆபத்தான இடங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். யாராவது அவர்களுக்கு தொல்லை கொடுத்தால் அவர்களை காட்டிக் கொடுப்பதும் தான். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் நமது குழந்தைகள் வாழவும், வளரவும் ரொம்ப அவசியம். 

    இவர்களிடம் இருந்து தப்பிக்க என்னனென்ன செய்ய வேண்டும். எப்படி தப்பிக்க வேண்டும் என்பது குறித்து வீடியோவில் விளக்கி உள்ளார். #NanditaSwetha

    நந்திதா பேசிய முழு வீடியோ:
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் `நாடோடிகள்-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அடுத்ததாக `அப்பா' படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கப் போவதாக சமுத்திரக்கனி அறிவித்துள்ளார். #Appa2 #Samuthirakkani
    `காலா' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள சமுத்திரக்கனி நடிப்பில், அடுத்ததாக `ஆண்தேவை' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதேநேரத்தில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் `நாடோடிகள்-2' படமும் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2016-ஆம் வெளியான படம் `அப்பா'. சமுத்திரக்கனி, தம்பி ராமைய்யா, நமோ நாராயணா, கேப்ரியல்லா சார்ல்டன், விக்னேஷ் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தான் இயக்கவிருப்பதாக சமுத்திரக்கனி அறிவித்திருக்கிறார். 



    தந்தையர் தினமான நேற்று தந்தையர் தின வாழ்த்துக்களுடன் `அப்பா-2' படம் ஆரம்பமாகியிருப்பதாக சமுத்திரக்கனி போஸ்டருடன் அறிவித்துள்ளார். #Appa2 #Samuthirakkani

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் - நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரவதம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Asuravadham #SasiKumar
    `கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ மற்றும் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அசுரவதம்’ படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இதில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். 

    இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த்மேனன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. #Asuravadham #SasiKumar

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் `நாடோடிகள்-2' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Naadodigal2 #SasiKumar
    சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. 

    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 



    தேனி, மதுரை என தென் மாவட்டங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும், படம் வருகிற ஆகஸ்டில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

    ×