என் மலர்
சினிமா

அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மருது பாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் - நந்திதா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அசுரவதம்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Asuravadham #SasiKumar
`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ மற்றும் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார். மருது பாண்டியன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அசுரவதம்’ படத்தை ‘செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லீனா லலித்குமார் தயாரித்துள்ளார். இதில் சசிகுமார் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு கோவிந்த்மேனன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. #Asuravadham #SasiKumar
Next Story