என் மலர்

  சினிமா

  முதலில் சூர்யா, இரண்டாவது ஆர்யா, மூன்றாவது ஜெயம் ரவி
  X

  முதலில் சூர்யா, இரண்டாவது ஆர்யா, மூன்றாவது ஜெயம் ரவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர்கள் சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் முதலாவது இரண்டாவது ஜஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள நிலையில், மூன்றாவதாக ஜெயம் ரவி வெளியிட இருக்கிறார். #Naadodigal2
  சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.

  படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரமோஷனுக்காக ஜஸ்ட் லுக் என்ற பெயரில் படக்குழு படத்தின் முக்கிய வசனங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் முதல் ஜஸ்ட் லுக் வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். இரண்டாவது ஜஸ்ட் லுக்கை ஆர்யா வெளியிட்டார்.

  அடுத்ததாக மூன்றாவது ஜஸ்ட் லுக்கை ஜூலை 14ம் தேதி மாலை 5 மணிக்கு ஜெயம்ரவி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.   மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். #Naadodigal2 #Velvom 
  Next Story
  ×