என் மலர்
சினிமா

நாடோடிகள்-2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் `நாடோடிகள்-2' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. #Naadodigal2 #SasiKumar
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது.
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

தேனி, மதுரை என தென் மாவட்டங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்க இருப்பதாகவும், படம் வருகிற ஆகஸ்டில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Naadodigal2 #Samuthirakani #Sasikumar
Next Story