என் மலர்

  நீங்கள் தேடியது "Arvind Swami"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் அரவிந்த் சாமி அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாற இருக்கிறார். #ArvindSwami #NirmalKumar
  செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் கள்ளபார்ட் படத்திலும் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.

  அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ பட இயக்குனர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

  இப்படம் குறித்து மதியழகன் கூறும்போது, ‘இது ஒரு முழுமையான ஆக்சன் திரைப்படம். அரவிந்த்சாமி இரண்டு லுக்கில் வருவதால் தனது உடல் எடையை கணிசமாக கூட்டியிருக்கிறார். படத்தின் முதல் பார்வை மார்ச் முதல் வாரத்திலும், படப்பிடிப்பு மார்ச் இறுதியிலும் தொடங்க இருக்கிறது.  எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 12வது படைப்பாக இப்படம் தயாராகிறது. நயன்தாராவின் கொலையுதிர் காலம், ஹன்சிகா நடிக்கும் மஹா, மற்றும் நடிகர் அருண் விஜய்யின் பாக்சர் ஆகிய திரைப்படங்கள் எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் உருவாகி வருகிறது’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல படங்களில் பிசியாக நடித்து வரும் அரவிந்த் சாமி, அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். #ArvindSwami
  செக்கச் சிவந்த வானம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் கள்ளபார்ட் படத்திலும் அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.  இந்நிலையில், அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இப்படம் பற்றிய முழுவிவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ArvindSwami
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில், கதாநாயகன், வில்லன் என்று பெயர் பெற்ற நடிகர் அரவிந்த் சாமி, சென்சாரில் அரசியல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #ArvindSwami
  மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து வருகிறார். பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அரவிந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

  கேள்வி:- மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்தது ஏன்?

  பதில் நான் நடிகனாக வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. பணம் கிடைக்கிறதே என விளம்பரப் படங்களில் நடித்து வந்தேன். அதை பார்த்து தளபதி படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார். எனக்கு என்ன வரும், வராது என்பது மணிரத்னத்திற்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பின் போது தளத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதன் மூலம் தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

  கேள்வி:- இன்றைய சினிமாவுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்ன?

  பதில்:- சென்சார் போர்டு என்ற அமைப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வகுத்துள்ள வரையறைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை.

  தமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்தால் யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்று கிடையாது. அதேபோல அன்பை வெளிப்படுத்தும் முத்தக்காட்சிக்கும் அனுமதி கிடையாது.  சென்சாரில் அரசியல் இருக்கிறது. இங்கே நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது. நாங்கள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்த மாட்டோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை சிந்திக்க வைப்பது. சினிமா வேலை போதிப்பது அல்ல. மக்களை சந்தோ‌ஷப்படுத்துவது. ஆனால் அதேநேரம், படம் பார்த்த ஒருவர், தனது வீட்டிற்கு என்ன எடுத்து செல்கிறார் என்பதும் முக்கியம். அதேபோன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்.

  இவ்வாறு அவர் பேசினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் முன்னோட்டம். #ChekkaChivanthaVaanam #CCV
  மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

  இதில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர்அலி கான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா உள்பட பலரும் நடித்துள்ளனர்.

  இசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன், படத்தொகுப்பு - ஸ்ரீகர்பிரசாத், பாடல்கள் - வைரமுத்து, கலை - ‌ஷர் மிஷ்டாராய், சண்டைபயிற்சி - திலீப் சுப்புராயன், எழுத்து - மணிரத்னம், சிவா ஆனந்த், தயாரிப்பு - மணிரத்னம், சுபாஸ்கரன், இயக்கம் - மணிரத்னம்.   “பிரபல நடிகர்-நடிகைகள் கூட்டணி சேர்ந்துள்ள இந்த படம் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. எப்போதுமே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தை கொடுப்பவர் மணிரத்னம். நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ள ‘செக்கச் சிவந்தவானம்’ அனைவரும் ரசிக்கும் எழில் கொஞ்சும் கதையாக உருவாக இருக்கிறது. இது இயக்குனர் மணிரத்னத்தின் புதிய பரிமாணமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

  சமீபத்தில் வெளியாகிய இரண்டு டிரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ChekkaChivanthaVaanam #CCV

  செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் 2:


  செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் 1:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் அடுத்த டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

  படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

  இந்த நிலையில், படத்தின் இரண்டாவது டிரைலர் நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam  #CCVTrailer2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாக இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது. #CCV
  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

  படப்பிடிப்பு முடிந்து, புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் அதிகாரிகளுக்கு படத்தை திரையிட்டு காண்பித்திருக்கிறார்கள். படத்தை பார்த்த அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.


  இப்படம் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசாக இருக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

  படப்பிடிப்பு முடிந்து, புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் ஒரு நாள் முன்னதாக ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும், படத்தின் டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

  தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் படம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `செக்கச்சிவந்த வானம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் தனது வெற்றியின் ரகசியம் குறித்து பேசினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam
  மணிரத்னம் இயக்கத்தில் அரவந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `செக்கச்சிவந்த வானம்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை நேரலையாக வாசித்து காண்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் ‘நல்ல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் என் படங்களில் இடம்பெறுவதே எனது வெற்றியின் ரகசியம்’ என்றார்.

  அருண்விஜய் பேசும்போது ’சிம்புவுடன் பணிபுரிந்தபோது தான் அவர் எப்படிபட்டவர் என்று புரிந்தது. சிறந்த மனிதர் அவர். இந்த படத்தில் நான் இடம்பெற்றதில் எந்த அளவு மகிழ்ச்சியோ அதே மகிழ்ச்சி சிம்பு இந்த படத்தில் இடம்பெற்றதில் எனக்கு இருக்கிறது’ என்றார். ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், வைரமுத்து மூவரிடமும் இந்த கூட்டணியில் உருவான எந்த பாடல் உங்கள் ஃபேவரிட்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.  அதற்கு ஏ.ஆர்.ரகுமான் கண்ணாளனே(பம்பாய்) பாடலையும், வைரமுத்து உயிரே(பம்பாய்) பாடலையும், மணிரத்னம் தமிழா தமிழா(ரோஜா) பாடலையும் கூறினார்கள். அதிதி ராவ் பேசும்போது ‘நான் இன்னும் தமிழ் கற்றுக்கொள்ளாதது வசதியாக போய்விட்டது. தமிழ் தெரியாததால் மணிரத்னத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது’ என்றார். சிம்பு பேசும்போது படம் பற்றி பேச மறுத்துவிட்டார். படம் பேசும் என்று மட்டும் கூறினார். #ChekkaChivanthaVaanam #Maniratnam 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

  படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

  அடுத்ததாக படத்தின் இசை வருகிற 5-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை கச்சேரியும் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பேஸ்புக்கில் நேரலையில் ஒளிபரப்பவும் படக்குழு முடிவு செய்துள்ளது.

  அதனைத் தொடர்ந்து படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #CCV #ChekkaChivanthaVaanam

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
  மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  படத்தில் சேநாதிபதி என்ற கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மாபெரும் தொழிலதிபராக வருகிறார். அவரது மூன்று மகன்கள் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு ஆகிய மூன்று பேரும் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர். மறுமுனையில் போலீஸ் அதிகாரியான விஜய் சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது. 

  மொத்தத்தில் உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே, அப்போ யுத்தம் தான் உள்ளிட்ட காரசாரமான வசனங்களுடன் குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதல், நட்பு, அதிரடி என அனைத்தும் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகாவும், அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷும், சிம்பு ஜோடியாக டயானா எரப்பாவும் வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசையுடன் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் டிரைலர்  படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னமும் கூட்டியுள்ளது. படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாக இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam

  செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மணிரத்னம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #CCV #ChekkaChivanthaVaanam
  காற்று வெளியிடை படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

  படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

  முன்னதாக படத்தில் நடித்துள்ள முன்னணி நட்சத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும், அவர்களது ஜோடிகளையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வந்தது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

  தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் டப் செய்யப்படும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #ChekkaChivanthaVaanam #CCV

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo