search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koothan"

    ராஜ்குமார், ஸ்ரிஜிதா, நடிப்பில் வெங்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கூத்தன்’ படத்தின் விமர்சனம். #Koothan #KoothanMovieReview
    சென்னையில் ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டிங்கை அகற்றாமல், சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். அப்பகுதியில் வசித்து வரும் துணை நடிகையான ஊர்வசியின் மகன்தான் நாயகன் ராஜ்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு நடன குழுவை நடத்தி வருகிறார். 

    இந்நிலையில், கலைஞர்களுக்காக கொடுத்த இடத்தை கேட்கிறார் தயாரிப்பாளரின் மகன். தான் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அந்த இடத்தை கொடுத்தால் பணப்பிரச்சனை தீரும் என்றும் கூறுகிறார். ஆனால் சினிமா கலைஞர்களுக்கோ அந்த இடத்தை விட்டு போக விருப்பம் இல்லை. அதேசமயம், தங்களுக்கு இடம் கொடுத்த தயாரிப்பாளர் மகனையும் அப்படியே அனுப்ப மனம் இல்லை. அதனால், தங்களால் முடிந்த பணத்தை கொடுக்கிறோம் என்று நாயகன் ராஜ்குமார் கூறுகிறார்.

    அதன்படி பணத்தை திரட்ட தயாராகும் ராஜ்குமார், உலகளவில் நடக்கும் நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றால் கோடிக் கணக்கில் பணம் கிடைப்பதை அறிந்து அதில் கலந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.



    மற்றொரு புறத்தில் பரத நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர் நாயகி ஸ்ரிஜிதா. இவரின் ஒரே உரிக்கோள் பெரிய நடன கலைஞராக இருக்கும் நாகேந்திர பிரசாத்தை தோற்கடிப்பது. நாயகன் ராஜ்குமாருக்கும் நாயகி ஸ்ரிஜிதாவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஸ்ரிஜிதாவும் பணப்பிரச்சனையில் சிக்குகிறார். இதற்கு ஒரே வழி நடனப் போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

    இறுதியில் நாயகன் ராஜ்குமார் அந்த போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்று கலைஞர்களுக்கான குடியிருப்பு பகுதியை தக்க வைத்தாரா?  நாயகி ஸ்ரிஜிதா, நாகேந்திர பிரசாத் மீது கோபமாக இருக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜ்குமார், சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடன திறமையை திறம்பட செய்திருக்கிறார். நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் தமிழ் சினிமாவில் வலம் வரலாம்.  நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். 

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாகேந்திர பிரசாத் திரையில் தோன்றி ரசிகர்களை நடனத்தால் கவர்ந்திருக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார்கள்.



    நடனத்தை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், மாறுபட்ட கதைக்களத்துடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. படத்தில் ஒரு சில காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக டி.ஆர். பாடிய பாடல் தாளம் போட வைக்கிறது. மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கூத்தன்’ ஜித்தன்.
    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் கூத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம். #Koothan
    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன். 

    சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் A L வெங்கி. சினிமாவை பின்னனியாகக் கொண்டு இதுவரை நிறையப்படங்கள் வந்திருந்தாலும், இந்தப்படம் புதிய கோணத்தில் இதுவரை இல்லாத துணை நடிகர்களின் வாழக்கையை பேசும் படமாக இருக்கும்.

    அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் நாயகன் நாயகியாக் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஸ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

    இந்தப்ப்டத்தில் பாலாஜி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு மாடசாமி, படத்தொகுப்பு பீட்டர் பாபியா, கலை சி.ஜி.ஆனந்த், நடனம் அஷோக் ராஜா, சுரேஷ், நிர்வாக தயாரிப்பு மனோஜ் கிருஷ்ணா, தயாரிப்பு நீல்கரிஸ் முருகன்.

    இப்படம் அக்டோபர் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
    நீல்கிரீஸ் முருகன், தான் தயாரித்திருக்கும் ‘கூத்தன்’ படத்தை பார்ப்பவர்களுக்கு தங்கம் பரிசளிப்பதாக அறிவித்திருக்கிறார். #Koothan #KoothanMovie
    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகனின் நீல்கிரீஸ் ட்ரீம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் ‘கூத்தன்’. இப்படத்தை ஏ.எல்.வெங்கி எழுதி இயக்குகிறார்.

    அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் (பிரபுதேவா தம்பி) நாகேந்திர பிரசாத், முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்னன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என ஒரு திரையுலக பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற 11ம் தேதி திரைக்கு வருகிறது.

    சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே பட டிக்கெட் விற்பனையை புதிய முறையில் தொடங்கி பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் இப்போது படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு தங்கப்பரிசு அறிவித்து ஆச்சர்யப்படுத்துகிறார். 

    இப்படம் வெளியாகும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு கூப்பன் பெட்டி வைக்கப்படும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் கூப்பனில் பட டிக்கெட்டின் நம்பரையும் ரசிகர்கள் தங்கள் போன்நம்பர் முகவரி விவரத்தையும் எழுதி கூப்பன் பெட்டியில் போட வேண்டும். 



    தமிழகம் முழுதும் அப்பெட்டிகளில் உள்ள கூப்பன்களிலிருந்து 18 அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியாக கூத்தன் பட வெற்றிவிழாவில் ஒவ்வொருவருக்கும் 1 பவுன் தங்கம் வீதம் 18 பவுன் அளிக்கப்படும்.

    படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகனுக்கு பரிசு அறிவித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன். 
    கூத்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நமீதா, மச்சான் வார்த்தை உருவான விதம் குறித்து பேசியிருக்கிறார். #Namitha
    சினிமாவில் குழு நடனம் ஆடும் கலைஞர்களின் வாழ்க்கை பற்றி கூத்தன் என்ற படம் உருவாகி உள்ளது. ராஜ்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நமீதா பேசும்போது ‘மேலாளர் மனோஜ் தான் நான் இங்கு வரக்காரணம். என் வாழ்க்கையில் கொஞ்சம் வெற்றிவரக்காரணம் அவர் தான். அவர் தான் தமிழில் பேசுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.

    மச்சான் வார்த்தை உருவானது அப்படித்தான். ராஜ்குமார் மனோஜ் மூலம் அறிமுகமாகிறார். கண்டிப்பாக வெற்றி அடைவார். தண்ணியில் குதித்து விட்டதால் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

    இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது ’நான் இந்தமாதிரியான கதையை அடிப்படையாக வைத்து ஒரு கதையை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் இந்தப்படத்தை அவர்கள் அற்புதமாக எடுத்திருக்கிறார்கள்’ என்றார்.

    படத்தின் தயாரிப்பாளர் நீல்கிரிஸ் முருகன் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் விற்பனை முறையை அறிமுகப்படுத்தினார்.
    ராஜ்குமார், ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கூத்தன்’ படத்தின் அறிமுகப் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். #VijaySethupathi
    தயாரிப்பாளர் நீல்கிரீஸ் முருகன் அவர்களின் நீல்கிரீஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புத்தம் புதிய திரைப்படம் கூத்தன்.

    சினிமாவை பின்னனியாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சினிமாவில் நடிகர்கள் பின்னால் நடனமாடும் ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஏ.எல்.வெங்கி. அறிமுக நாயகன் ராஜ்குமார், அறிமுக நாயகிகள் ஸ்ரிஜிதா, சோனால், கீரா, ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), விஜய் டிவி முல்லை, கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, மனோபாலா, ஜீனியர் பாலையா, கவிதாலயா கிருஷ்ணன், ஶ்ரீரஞ்சனி, பரத் கல்யாண், ராம்கி, கலா மாஸ்டர் என திரையுலக பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

    இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல நடிகர் பிரபு வெளியிட்டு படத்தினையும் படக்குழுவையும் வெகுவாக பாராட்டினார்.



    இந்நிலையில் கூத்தன் படத்தின் அறிமுகப்பாடலை விஜய்சேதுபதி அவர்கள் வெளியிட்டார். படத்தின் கதையையும் பர்ஸ்ட் லுக், சிங்கிள் ஆகியவற்றை பார்த்த விஜய் சேதுபதி மிகவும் கவரப்பட்டு படக்குழுவை பாராட்டினார். மேலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூத்தன் படத்தின் அறிமுகப்பாடலான “கூத்தனம்மா கூத்தன், கூத்தனம்மா கூத்தன்” பாடலை அறிமுகம் செய்தார். பாலாஜி இசையில் வேல்முருகன் பாடியுள்ள இந்தப்பாடல் அனைவரையும் கவரும் வகையில் உள்ளதாகவும் கூறினார்.
    ×