என் மலர்
முன்னோட்டம்
பி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `தோனி கபடி குழு' படத்தின் முன்னோட்டம். #DhoniKabbadiKuzhu
மனிதம் திரைக்களம் எஸ்.நந்நகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தோனி கபடி குழு'.
`மைடியர் பூதம்' தொடரில் நடித்த அபிலாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே `நாகேஷ் திரையரங்கம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், சி.என்.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வெங்கடேஷ், இசை - சி.ஜே.ரோஷன் ஜோசப், பாடல்கள் - என்.ராசா, கலை - ஏ.சி,சேகர், படத்தொகுப்பு - யு.கார்த்திகேயன், தயாரிப்பு நிர்வாகம் - கே.மனோகரன், எஸ்.நந்நகுமார், தயாரிப்பு - மனிதம் திரைக்களம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பி.ஐயப்பன்

படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,
இந்த கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன்பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார். நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கையில் கபடி விளையாட்டு வீரர்களாக வரும் சிலரும் நடிக்கிறார்கள்.
இந்த படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhoniKabbadiKuzhu
ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் முன்னோட்டம். #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.
விமல் - ஆஷ்னா சவேரி நாயகன், நாயகியாக நடிக்க ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணா போலீஸ் வேடத்திலும், ஐரோப்பிய பட உலகின் ஆபாச நாயகிகளில் ஒருவரான மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை - நடராஜன் சங்கரன், பாடல்கள் - விவேகா, கலை - வைரபாலன், நடனம் - கந்தாஸ்,
ஸ்டண்ட் - ரமேஷ், படத்தொகுப்பு - தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
இது கிளாமர் கலந்த காமெடி படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம் என்றார்.
படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்
சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் கீதன் பிரிட்டோ - வர்ஷா பொலம்மா நடிப்பில் உருவாகி இருக்கும் `சீமத்துரை' படத்தின் முன்னோட்டம். #Seemathurai #GeethanBritto #VarshaBollamma
எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் சீமத்துரை என்ற படம் தயாராகி இருக்கிறது. ஈ.சுஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த படத்தில் கீதன் பிரிட்டோ கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். விஜி சந்திரசேகர், `நான் மகான் அல்ல’ மகேந்திரன், `கயல்’ வின்செண்ட், ஆதேஷ் பாலா, காசி மாயன், நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை - ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு - டி.திருஞானசம்பந்தம், படத்தொகுப்பு - டி.வீரசெந்தில்ராஜ், பாடல்கள் - அண்ணாமலை, நடனம் - சந்தோஷ் முருகன், கலை - என்.கே.ராகுல், தயாரிப்பு - புவன் மீடியா வொர்க்ஸ், இணை தயாரிப்பு - ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சந்தோஷ் தியாகராஜன்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது,
“ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.
அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை.
படத்தை டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Seemathurai #GeethanBritto #VarshaBollamma
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அக்ஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் முன்னோட்டம். #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் `2.0'.
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கிறது. சுதன்சு பாண்டே, கலாபவன் ஷாஜான், ரியாஸ் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இசை - ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி, பாடல்கள் - பாஸ்கர் பத்லா, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கலை - டி.முத்துராஜ், சண்டைபயிற்சி - ஸ்டண்ட் சில்வா, ஒலி வடிவமைப்பு - ரசூல் பூக்குட்டி, தயாரிப்பு - சுபாஸ்கரன், துணை இயக்குநர் - முகமது யூனஸ் இஸ்மாயில், திரைக்கதை, வசனம் - ஷங்கர், ஜெமோகன், கதை, இயக்கம் - ஷங்கர்.

படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-
எந்திரன் 2.0 படத்தின் பலமே ரஜினி தான். அவர் எது செய்தாலும் வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும், மாஸாகவும் இருக்கும். இப்படத்தில் ரஜினியை பல வடிவத்தில் பார்க்கலாம். எந்திரன் முதல் பாகத்தில் ரஜினியை வசிகரன், சிட்டி ஆகிய 2 வேடத்தில் பார்த்தோம். இப்படத்தில் வசிகரன், சிட்டி, ஜெயின்ட் சிட்டி, எந்திரன் 2.0 உள்ளிட்ட பல வேடத்தில் அவரை பார்க்கலாம்.
கண்களுக்கு 3டி டெக்னாலஜியும், காதுகளுக்கு 4டி ஒலி டெக்னாலஜியும் அருமையாக இருக்கும். கிராபிக்ஸ், சண்டை காட்சிகள், வி.எப்.எக்ஸ் ஆகியவைதான் சவாலாக இருந்தது.
படம் நவம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #2Point0 #Rajinikanth #AkshayKumar #AmyJackson
2.0 படத்தின் டிரைலர்:
ரஜீஷ்பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வண்டி’ படத்தின் முன்னோட்டம். #Vandi #Vidharth #ChandiniTamilarasan
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹாசீர் தயாரிக்கும் படம் ‘வண்டி’.
விதார்த் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி நடித்திருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், ஜான் விஜய், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு - ராகேஷ் நாராயணன், இசை - சூரஜ் எஸ் குரூப், படத்தொகுப்பு - ரிசால் ஜெய்னி, கலை - மோகன மகேந்திரன், பாடல்கள் - சினேகன், சங்கீத், நடனம் - தினேஷ், ஜாய் மதி, சண்டை பயிற்சி - சிறுத்தை கணேஷ், வசனம் - அரசு வி. ரஜீஷ்பாலா, தயாரிப்பு - ஹஷீர். எழுத்து - இயக்கம்- ரஜீஷ்பாலா.

படம் பற்றி இயக்குநர் பேசும் போது...
காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை `பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.
அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சேர்த்து ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறான். அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வாழ்க்கை சந்தோஷமாக போய்க் கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் பார்த்தோம். தற்போது, ‘வண்டி’ படத்தில் எமஹா ஆர்எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் இந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பு ‘வண்டி’ என்று ஆகி இருக்கிறது” என்றார். #Vandi #Vidharth #ChandiniTamilarasan
ராஜ் பாபு இயக்கத்தில் நகுல் - ஆஞ்சல் முஞ்சல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செய்’ படத்தின் முன்னோட்டம். #Sei #Nakul #AanchalMunjal
‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘செய்’.
நகுல் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சல் நடித்திருக்கிறார். அஞ்சலி ராவ், பிரகாஷ் ராஜ், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - நிக்ஸ் லோபஸ், ஒளிப்பதிவு - விஜய் உலகநாதன், படத்தொகுப்பு - வி.கோபிகிருஷ்ணா, கலை இயக்குநர் - ஆர்.ஜனார்த்தனன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மதன் கார்க்கி, விவேக், யுகபாரதி, தயாரிப்பு - மன்னு, உமேஷ், தயாரிப்பு நிறுவனம் - ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ், எழுத்து, இயக்கம் - ராஜ் பாபு.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நகுல் பேசுகையில், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தீவிர மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற 23-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Sei #Nakul #AanchalMunjal
செய் படத்தின் டிரைலர்:
ஆஸிப் குரைஷி இயக்கத்தில் உதயா - பிரபுவுடன் நடிகர் சங்க பிரபலங்கள் பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் முன்னோட்டம்.
ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘உத்தரவு மகாராஜா’.
இதில் உதயாவுடன் பிரபு இணைகிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் நாசர், கோவைசரளா, ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டிபத்மினி நடிக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகளுடன் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர்.

இசை - நரேன் பாலகுமாரன், படத்தொகுப்பு - சத்ய நாராயணன், நடனம் - சாண்டி, இயக்கம் - ஆஸிப் குரைஷி.
`உத்தரவு மகாராஜா’ படத்தின் திரைக்கதையில் ஒரு புதிய முயற்சியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். இது முற்றிலும் மாறுபட்ட நகைச்சுவை, ஆக்ஷன் கலந்த சைக்கோ திரில்லர் கதை. இயக்குனராக ஆஸிப் குரைஷி அறிமுகமாகிறார். இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் முன்னோட்டம். #KaatrinMozhi #Jyothika
பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள படம் காற்றின் மொழி.
ஜோதிகா ஆர்.ஜே.வாக நடித்திருக்கும் இந்த படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் சிம்பு, யோகி பாபு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இசை - ஏ.எச்.காஷிப், படத்தொகுப்பு - பிரவின்.கே.எல்., ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, கலை இயக்குனர் - கதிர், சண்டைப்பயிற்சி - நடனம் - விஜி சதிஷ், உடை வடிவமைப்பாளர் - பூர்ணிமா ராமசாமி, பாடலாசிரியர் - மதன் கார்க்கி, தயாரிப்பு - தனஞ்ஜெயன், தயாரிப்பு நிறுவனம் - பாப்டா மீடியா, கதை - சுரேஷ் திரிவேனி, வசனம் - பொன் பார்த்திபன், இயக்கம் - ராதாமோகன்.

படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜோதிகா பேசியதாவது,
ரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.
இந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். இப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது. என்றார்.
படம் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #KaatrinMozhi #Jyothika
கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திமிரு புடிச்சவன்' படத்தின் முன்னோட்டம். #ThimiruPudichavan #VijayAntony #NivethaPethuraj
விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் `திமிரு புடிச்சவன்'.
விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சாய் தீனா, முத்துராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - ரிச்சர்டு எம்.நாதன், கலை இயக்குநர் - எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டைப்பயிற்சி - ஆர்.சக்தி சரவணன், பாடல்கள் - அருண் பாரதி, ஏகாந்த், ஒலி வடிவமைப்பாளர் - ஏ.எம்.ரஹ்மத்துல்லா, விஜய் ரத்தினம், ஒலிப்பதிவு பொறியாளர் - கே.சக்திவேல், எஸ்.சந்திரசேகர், தயாரிப்பு - பாத்திமா விஜய் ஆண்டனி, தயாரிப்பு நிறுவனம் - விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன், எழுத்து, இயக்கம் - கணேசா.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் விஜய் ஆண்டனி பேசும் போது,
தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை. இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார்.
படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #ThimiruPudichavan #VijayAntony #NivethaPethuraj
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாக இருக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் முன்னோட்டம். #KombuVatchaSingamda
‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ‘REDHAN’ நிறுவனத்தின் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’
தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து SR.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது இந்த கூட்டணி.
1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக்கிவைத்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர் பகுதிகளில் நடந்து குற்றாலத்தில் நிறைவடைகின்றது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத்தொகுப்பில், ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, ராஜீ சுந்தரம் நடனத்தில், மைக்கேல்ராஜ் கலையில், மோகன்ராஜ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில், P.சந்துருவின் தயாரிப்பு மேற்பார்வையில், மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக்கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் SR.பிரபாகரன். தயாரிப்பு - இந்தர்குமார்.
பூர்ணா, கபீஷ் கன்னா, பிர்லா போஸ், திவ்யா நடிப்பில் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் ‘புளூவேல்’ படத்தின் முன்னோட்டம். #Bluewhale
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளூவேல்’ (Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்தது உலகத்தையே உலுக்கியது. இன்றைய தனி நபரின் வாழ்க்கையானது பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற கடினமான நெருக்கடி கொடுக்கக்கூடிய சூழ்நிலை தான் நிலவுகிறது. இந்த மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதற்கு பல செயல்களை செய்கிறார்கள். இதில் ஒன்று தான் ‘புளூவேல்’ விளையாட்டு. ஆனால், இந்த விளையாட்டால் தங்கள் உயிரையும் இழந்து விடுகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரிய விஷயம். அதை மையப்படுத்தி ஒரு சமூக திரில்லர் படமாக உருவாகும் படம் தான் ‘புளூவேல்’. சில மணி நேரத்தில் நடக்கும் கதையே இப்படம். அதை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் ஆடம்பரமாகவும், அவர்களின் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் இருவருமே சம்பாதிக்கின்றனர். அதைவிட, விலைமதிக்க முடியாத அன்பு, கவனிப்பு, பாசம் மற்றும் நேரத்தை அவர்களுடன் செலவழிக்காதது பிள்ளைகளை தவறான பாதையில் கொண்டு சேர்க்கும் என்ற விபரீதத்தை அறியாதிருக்கிறார்கள்.
சமீக காலமாக தன் நடிப்புத் திறமையால் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார் பூர்ணா. அவர் இந்த படத்தில் காவல்துறை உதவி ஆணையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். இவரின் பெற்றோராக கேரளாவைச் சேர்ந்த பிர்லா போஸ் மற்றும் திவ்யா நடிக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள் : இயக்கம் - T.ரங்கநாதன், இசை - PC ஷிவன், ஒளிப்பதிவு - KK, படத்தொகுப்பு - ‘ஜோக்கர்’ படம் மூலம் பிரபலமான சண்முகம், கலை - NK ராகுல். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் P. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பும், வெளியாவதற்கான பணிகளும் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
கிராந்தி பிரசாத் இயக்கத்தில் நிராந்த் - ருத்ரா ஆரா நடிப்பில் உருவாகி இருக்கும் `சந்தோஷத்தில் கலவரம்' படத்தின் முன்னோட்டம். #SanthoshathilKalavaram #Niranth #RudraAura
ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி.வி.சி. தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `சந்தோஷத்தில் கலவரம்'.
நிரந்த், ருத்ரா ஆரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ராகுல் சி.கல்யாண், கெளதமி, செளஜன்யா, ஷிவானி, அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ராவி மரியா வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - ஹரிசன் லோகன் ஹோவஸ், பவுலியஸ் கொன்டிஜிவாஸ், ஷிரவன் குமார், இசை - சிவநாக், பாடல்கள் - கபிலன், மணி அமுதன், ப்ரியன், படத்தொகுப்பு - கிராந்தி குமார், ஒலிப்பதிவு - அருண் வர்மா, தயாரிப்பு - ஸ்ரீ குரு சினிமாஸ், எழுத்து இயக்கம் - கிராந்தி பிரசாத்.

படம் பற்றிய இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசியதாவது,
ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் `தீமைக்கும் நன்மைக்கும்' இடையில் நடக்கும் மோதல் என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றார்.
படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. #SanthoshathilKalavaram #Niranth #RudraAura






