என் மலர்
சினிமா

சீமத்துரை
சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில் கீதன் பிரிட்டோ - வர்ஷா பொலம்மா நடிப்பில் உருவாகி இருக்கும் `சீமத்துரை' படத்தின் முன்னோட்டம். #Seemathurai #GeethanBritto #VarshaBollamma
எளிய மனிதர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் வகையில் சீமத்துரை என்ற படம் தயாராகி இருக்கிறது. ஈ.சுஜய் கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த படத்தில் கீதன் பிரிட்டோ கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். விஜி சந்திரசேகர், `நான் மகான் அல்ல’ மகேந்திரன், `கயல்’ வின்செண்ட், ஆதேஷ் பாலா, காசி மாயன், நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை - ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு - டி.திருஞானசம்பந்தம், படத்தொகுப்பு - டி.வீரசெந்தில்ராஜ், பாடல்கள் - அண்ணாமலை, நடனம் - சந்தோஷ் முருகன், கலை - என்.கே.ராகுல், தயாரிப்பு - புவன் மீடியா வொர்க்ஸ், இணை தயாரிப்பு - ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சந்தோஷ் தியாகராஜன்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது,
“ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.
அப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை.
படத்தை டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Seemathurai #GeethanBritto #VarshaBollamma
Next Story