என் மலர்

  நீங்கள் தேடியது "Poorna"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பூர்ணா.
  • கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பானது.

  தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடந்தது.

   

  பூர்ணா

  பூர்ணா

  கடந்த 2020-ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பானது. அப்போது பூர்ணாவை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்து இருப்பதாகவும், பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். பின்னர் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கும் சென்றனர். அதன்பிறகு பூர்ணாவிடம் பணம் கேட்டும், தங்க கடத்தலில் ஈடுபடும்படியும் மிரட்டினர்.

  பூர்ணா

  பூர்ணா

   

  இதுகுறித்து பூர்ணாவின் தாய் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் விசாரணை நடத்தி ரபீக், முகமது செரீப், ரமேஷ், அஷ்ரப், ரகீம், அபுபக்கர் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹனி வர்கீஸ் 10 குற்றவாளிகளையும் டிசம்பர் 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திரைத்துறையைச் சேர்ந்த பலர் கோல்டன் விசா பெற்று வருகின்றனர்.
  • தற்போது நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

  ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.


  விக்ரம்

  இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர்.


  பூர்ணா - விக்ரம் - ஷானித் ஆசிப் அலி

  இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதனை நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி வழங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
  • சிலதினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

  தமிழில் பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு, அருள் நிதியுடன் தகராறு, சசிகுமாரின் கொடி வீரன் மற்றும் கந்தகோட்டை, துரோகி, ஆடுபுலி, காப்பான், சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூர்ணா, சில தினங்களுக்கு முன்பு துபாய் தொழில் அதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகர்-நடிகைகள் பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது கணவருடன் துபாயில் குடியேறி இருக்கிறார்.

   

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  இந்நிலையில் பூர்ணாவுக்கு அவரது கணவர் விலை உயர்ந்த பொருட்களை திருமண பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் பெரிய சொகுசு வீடு ஒன்றை பூர்ணாவுக்கு பரிசாக கொடுத்துள்ளார். மேலும் 1,700 கிராம் தங்க-வைர நகைகளையும் பரிசாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
  • திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

  தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. அதன்பின்னர் கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

   

  பூர்ணா

  பூர்ணா

  பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்' என்று அவர் தெரிவித்து இருந்தார்.

  பூர்ணா

  பூர்ணா

   

   சமீபத்தில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு "எப்போதும் என்னுடையவர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

   

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  இந்நிலையில் பூர்ணா- ஷானித் ஆசிப் அலியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். தனது திருமணம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "சிறப்பு, நான் உலகின் மிக அழகான பெண்ணாக இல்லாமல் இருக்கலாம், அல்லது ஒரு நல்ல வாழ்க்கைத் துணையின் அனைத்து குணநலன்களையும் பெறாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னைக் குறைவாக உணரவில்லை.

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

   

  நான் யார் என்பதற்காக நீங்கள் என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னில் உள்ள சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க என்னை ஊக்கப்படுத்தினீர். இன்று, நம் நெருங்கிய சொந்தங்களுக்கு மத்தியில் நீங்களும் நானும் இந்த அற்புதமான ஒற்றுமை பயணத்தைத் தொடங்குகிறோம்.

   

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  பூர்ணா - ஷானித் ஆசிப் அலி

  இது கொஞ்சம் அதிகம் என்று எனக்குத் தெரியும், இன்ப துன்பத்தில் உங்களுடன் இருப்பேன் என்றும் எப்போதும் உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளிக்கிறேன் என பூர்ணா பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூர்ணா.
  • திருமணம் குறித்த வதந்திக்கு நடிகை பூர்ணா ஒரு புகைப்படத்தின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

  தமிழில் 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

   

  பூர்ணா

  பூர்ணா

  பூர்ணாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 'குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன், எனது அடுத்த வாழ்க்கை பகுதிக்கு அடியெடுத்து வைக்கிறேன்' என்று அவர் தெரிவித்து இருந்தார்.

  இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலரும் திருமணம் ரத்தாகி விட்டது உண்மையா? என்று பூர்ணாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

   

  இதற்கு பதில் அளிக்கும் வகையில் பூர்ணா தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு "எப்போதும் என்னுடையவர்" என்று குறிப்பிட்டு திருமண ரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எனது திருமணம் நிச்சயித்தபடி நடைபெறும் என்பதை உறுதிசெய்ய இந்த படம் போதுமா? என்று பூர்ணா கேட்பது போல் அவருடைய பதிவு உள்ளது. இதையடுத்து வலைத்தளத்தில் ரசிகர்கள் பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிதின் சத்யா தயாரிப்பில் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். #Vaibhav #VenkatPrabhu
  வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர `காட்டேரி', `சிக்ஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துமுடித்துள்ளார்.

  தற்போது நிதின் சத்யாவின் ஷ்வேத் குரூப்பின் இரண்டாவது தயாரிப்பாக உருவாகும் படத்தில் வைபவ் நாயகனாக நடித்து வருகிறார். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


  வைபவ், ஈஸ்வரி ராவ் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க, நிதின் சத்யா - வைபவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான வெங்கட் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் வில்லத்தனம் கலந்த போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

  சஸ்பென்ஸ் கலந்த திகில் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #Vaibhav #VenkatPrabhu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பூர்ணா, தற்போது நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது பதட்டமாகி இருக்கிறார். #Poorna
  'சவரக்கத்தி' படத்தில் அவரின் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை பூர்ணா. இவர் தன் நடிப்பாற்றல் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, சக்தி வாய்ந்த நடிப்பை வழங்குவார். தற்போது ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்து வரும் 'அடங்க மறு' படத்தில், வழக்கறிஞராக நடித்து வருகிறார். 

  இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இந்த கதாபாத்திரத்தில் அவரை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் ஒரு மிருதுவான காரணத்தைக் கூறுகிறார். அவர் கூறும்போது, "ஆரம்பத்தில், வலுவான ஒரு சிந்தனை மனதில் தோன்றும் வரை, நான் ஒரு ஆண் நடிகரை தான் இந்த வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். பொது நிகழ்ச்சிகளிலிருந்து, டைனிங் டேபிள் வரை பாலின சமத்துவம் பற்றி நாம் பேசும்போது, அந்த வரம்புக்குள் அவர்களை கட்டுப்படுத்துவது அநியாயமாக இருக்கும். எனவே, இந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிகரை நடிக்க வைக்கும் யோசனையை செயலாக்கினேன், படக்குழுவும் அதற்கு இசைந்தார்கள். இருப்பினும், ஒரு பொருத்தமான நடிகையை தேர்ந்தெடுப்பது தான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. அங்கு பூர்ணா அனைவரது தேர்வாகவும் வந்தார். இப்போது பூர்ணாவை தவிர வேறு எவருமே இந்த பாத்திரத்தை முழுமையாக்கி இருக்க மாட்டார்கள் என நினைக்கிறோம்" என்றார்.   நடிகை பூர்ணா இந்த பாத்திரத்தில் நடித்த தனது அனுபவத்தை பற்றி கூறும்போது, "இது ஒரு எளிமையான விஷயம் அல்ல. உண்மையில், முதல் முறையாக நீதிமன்ற அறை செட்டுக்குள் நுழைந்தவுடன் எனக்கு பதட்டம் ஏற்பட்டது. என்ன தான் முன் தயாரிப்பு மற்றும் ஒத்திகைகள் பார்த்திருந்தாலும், படப்பிடிப்பு சூழ்நிலையில் தான் ஒரு கதாபாத்திரத்தின் சரியான கணிப்பை நாம் உணர முடியும். இந்த கதாபாத்திரத்தின் உடல் மொழி, உரையாடல் மற்றும் மேனரிஸம் ஆகியவற்றில் முழுமையான நேர்த்தி தேவைப்பட்டது. ரவி மற்றும் கார்த்திக் இருவருக்கும் நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ரசிகர்கள் என் நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்" என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் வெளியாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் விமர்சனம். #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri
  விமல், சிங்கம் புலி இருவரும் மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

  யாராவது ஊருக்கு செல்வது இவர்களுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு சந்தேகம் வராத பொருட்களை, சின்ன சின்ன பொருட்களை மட்டும் திருடி எடைக்கு போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பிழைப்பை ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.  இந்த நிலையில், ஒருநாள் திருட செல்லும் போது ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதேபோல் மற்றொரு வீட்டில் திருட செல்லும் சிங்கம் புலி அங்கிருந்து ஒரு பையை எடுத்து வருகிறார். அந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க, அதிலும் லட்சக் கணக்கில் பணம் இருக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

  இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய பொருள் ஒன்றில் முக்கியமான பொருள் இருப்பதால், அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ரவுடி கும்பல் ஒன்று அவர்களை தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் இருவரையும் தேடி வருகிறார்.  கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி புயல் மியாவிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் சிரிப்பை அள்ளுகிறார். சிங்கம் புலி குருவாக வர, விமல் அவருக்கு சிசியனாக படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் பங்காற்றியிருக்கின்றனர். சிங்கம் புலி வழக்கமான தனது காமெடியால் சிரிக்க வைக்கிறார்.

  ஆஷ்னா சவேரி காதலுடன் கவர்ச்சியையும் தூவிவிட்டு சென்றிருக்கிறார். மியா ராய் லியோன் கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார். மற்றபடி ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  காதல், காமெடி, கவர்ச்சி இவை மூன்றையுமே பொருளாக கொண்டு படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி சற்றே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ் வருகைக்கு பின் படம் வேகமெடுக்கிறது. அடல்ட் காமெடி ஜானரில் இயக்குநர் கதையில் காட்டிய முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் கொஞ்சம் காட்டியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும்.

  சங்கர நாராயணன் நடராஜனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

  மொத்தத்தில் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' சிறியதாக இருக்கு. #EvanukkuEngeyoMatchamIrukkuReview #Vemal #AshnaZaveri

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் மூலம் சன்னி லியோனின் சகோதரி மியா ராய் லியோன் தமிழில் அறிமுகமாகிறார். #IvanukkuEngaiyoMachamIruku
  விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'. ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.

  இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆபாச பட நடிகை மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். இவர் சன்னி லியோனின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.  ஐரோப்பிய பட உலகில் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சன்னி லியோன். இந்திய சினிமாவுக்கு வந்த சன்னி லியோன் ஆபாச படங்களை தவிர்த்து இந்தி, தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில், மியா ராய் லியோனும் இணைந்திருக்கிறார். படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #MiaRaiLeone

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தின் முன்னோட்டம். #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri
  சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'.

  விமல் - ஆஷ்னா சவேரி நாயகன், நாயகியாக நடிக்க ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் பூர்ணா போலீஸ் வேடத்திலும், ஐரோப்பிய பட உலகின் ஆபாச நாயகிகளில் ஒருவரான மியா ராய் லியோன் கவர்ச்சி வேடத்திலும் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - கோபி ஜெகதீஸ்வரன், இசை - நடராஜன் சங்கரன், பாடல்கள் - விவேகா, கலை - வைரபாலன், நடனம் - கந்தாஸ், 
  ஸ்டண்ட் - ரமேஷ், படத்தொகுப்பு - தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - சுப்ரமணி, தயாரிப்பு நிர்வாகம் - பி.ஆர்.ஜெயராமன், தயாரிப்பு - சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம் - ஏ.ஆர்.முகேஷ்.  படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,

  இது கிளாமர் கலந்த காமெடி படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவை தான். இதற்குள் தான் எல்லா படங்களுமே அடங்கும். கிளாமரையும், நகைச்சுவையையும் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதையை அமைத்துள்ளோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம் என்றார்.

  படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #IvanukkuEngaiyoMachamIruku #Vemal #AshnaZaveri

  இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் தள்ளிப்போவது குறித்து பேசிய பூர்ணா, தன் திருமணம் தள்ளி போவதற்கு சாதி தான் காரணம் என்றும், சாதியை பெரிதாக நினைக்காமல், எந்த நிபந்தனையும் விதிக்காதவராக இருந்தால் திருமணம் செய்துகொள்ள தயார் என்றார். #Poorna
  நடிகை பூர்ணா 2004-ல் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பூர்ணா, விமல், ஆஸ்னா சவேரி நடிப்பில் உருவாகும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்து வருகிறார்.

  அவரது திருமணம் பற்றி கேட்டதற்கு ‘என் அம்மா தினமும் என் திருமணம் பற்றி பேசிவருகிறார். என் திருமணம் தள்ளி போவதற்கு காரணம் சாதி தான். சாதியையும் மீறி என்னை பெண் கேட்டு வருகிறவர்கள், திருமணத்திற்கு பின் நான் நடிக்க கூடாது என்று சொல்கிறார்கள்.  காதல் திருமணம் செய்தாலும் இதே பிரச்சினை தான் இருக்கும். சாதியை பெரிதாக நினைக்காமல் எனக்கு எந்த நிபந்தனையும் விதிக்காதவராக இருந்தால் திருமணம் செய்துகொள்ள தயார்’ என்று கூறியுள்ளார். #Poorna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print