கீர்த்தி சுரேஷிற்காகதான் நடிக்க வந்தேன்.. பூர்ணா பதிவு

தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.இதில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா
Published on

நடிகை பூர்ணா, ஷனித் அசிப் அலி என்ற துபாய் தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகிற்குத் தற்காலிக ஓய்வு கொடுத்துள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் பூர்ணா, இந்த ரமலான் மாதத்தில் தன் குழந்தையின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான தசரா திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷிற்காக தான் நடித்ததாக அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், இதுபோன்ற சிறந்த திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உணர்கிறேன். தசரா படக்குழுவினர் உடனான அனைத்து ஜாலியான தருணங்களையும் மிஸ் செய்கிறேன். ஆனாலும் நான் கீர்த்திக்காக இந்தப்படத்தில் நடிக்க விரும்பினேன் என்று கூறியிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com