search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மரகதக்காடு
    X

    மரகதக்காடு

    மங்களேஸ்வரன் இயக்கத்தில் அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் `மரகதக்காடு' படத்தின் முன்னோட்டம். #Maragathakkaadu
    ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரிப்பில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘மரகதக்காடு'. 

    இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி.மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றி படம் பேசுகிறது.

    ஒளிப்பதிவு - நட்சத்திர பிரகாஷ், படத்தொகுப்பு - சாபு ஜோசப், சண்டைப் பயிற்சி - மிராக்கிள் மைக்கேல், கலை இயக்குநர் - மார்டின் டைட்டஸ், நடன இயக்குநர் - ஜாய் மதி, இசை - ஜெயப்பிரகாஷ், பாடலாசிரியர்கள் - விவேகா, மீனாட்சி சுந்தரம், அருண் பாரதி, சாரதி, ரவீந்திரன், ஆடை வடிவமைப்பாளர் - செல்வம், தயாரிப்பு: கே. ரகுநாதன் (ஆர் ஆர் ஃபிலிம்ஸ்), கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - மங்களேஸ்வரன்.



    படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது, 

    " இந்த விழாவில் பேசலாமா, வேண்டாமா என ஒரு தயக்கத்தோடுதான் வந்தேன். ஆனால் சமூக நோக்குடன் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்துள்ளார்கள் என்பது தெரிந்தும் நான் பேசாமல் போனால் அது கலைக்கு நான் செய்யும் துரோகம். பல ஆண்டுகளுக்குப்பின் மூத்த தயாரிப்பாளர்களை இந்த மேடையில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

    கூரை வீட்டிலும் ஒரு சுகம் இருக்கிறது. ஆனால் அது இன்று காணாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் கழித்து காட்டுக்கு சென்று அங்கேயே வாழ்ந்து செத்துவிடலாமா என்கிற யோசனைகூட எனக்கு வருகிறது. கஷ்டப்பட்டு படம் எடுப்பது வேறு, ஒருபடத்தை ரசித்து எடுப்பது என்பது வேறு. இந்தப்படத்தின் இயக்குனர் மங்களேஸ்வரன் இயற்கையை ரசிப்பவர். இந்தப்படத்தை ரசித்து ரசித்து எடுத்துள்ளார் " என்றார். #Maragathakkaadu 

    மரகதக்காடு படத்தின் டிரைலர்:

    Next Story
    ×