என் மலர்

  சினிமா செய்திகள்

  மீண்டும் வரும் பத்தல.. பத்தல.. பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்
  X

  விக்ரம் 

  மீண்டும் வரும் பத்தல.. பத்தல.. பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம்.
  • இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3- ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "பத்தல.. பத்தல.." பாடலில் இடம்பெற்றிருந்த அரசியல் வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ளது என பல கண்டனங்கள் எழுந்ததின் காரணமாக படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்டன.

  விக்ரம்

  எனினும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்பாடலின் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

  Next Story
  ×