ருத்ரன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ரன்.இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்
Published on

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ருத்ரன்

இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி, முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ருத்ரன் திரைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் 'ருத்ரன் திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை கேட்டு வருகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com